Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மீண்டும் அதிரடி கிளப்ப தயாராகும் கேஎஸ் ரவிக்குமார்.. இப்ப யாரை இயக்கப் போறாரு தெரியுமா?
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார்.
அவரது நடிப்பில் துர்கா, அதிகாரம், ருத்ரன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன.
நீண்ட நாட்களாகவே அவரது தம்பி எல்வினை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் கூறி வருகிறார்.
பிஎம்டபிள்யூ
பைக்...அஜித்
பயன்படுத்திய
கார்
பேரு
என்னங்க...தீயாய்
தேடும்
ரசிகர்கள்

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சிறப்பான பல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இவரது இயக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களும் இருக்கும் கண்டிப்பாக அந்தப் படங்கள் வெற்றிப்படங்களின் வரிசையிலுடம் இடம் பெறும்.

முழுநேர நடிகர்
இவருக்கும் ரஜினிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆனதை தொடர்ந்து இருவரும் இணைந்து பல படங்களை ரசிகர்களுக்கு சிறப்பாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு இயக்கத்திலிருந்து ஒதுங்கிய கேஎஸ் ரவிக்குமார் முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

சிறப்பான கேரக்டர்கள்
நடிப்பிலும் தான் சூப்பர் தான் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார். பல படங்களில் தந்தையாகவும், கேரக்டர் ரோல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மீண்டும் இவர் படங்களை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் ரஜினிகாந்த்தை சந்தித்தது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இயக்கம்
இந்நிலையில் தற்போது மீண்டும் இவரது இயக்கத்தில் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்சின் தம்பி எல்வினை வைத்து இவர் படமியக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரை தான் ஏற்றிராத புதிய கேரக்டரில் ராகவா லாரன்சும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் தயாரிப்பு
இந்தப் படம் குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் பிறந்தநாளின்போது வெளியானது. இந்தப் படத்தை ராகவா லாரன்ஸ் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ் சகோதரர் ஹீரோ
முன்னதாக ராகவா லாரன்சுடன் இணைந்து சில பாடல்களில் நடனக் காட்சிகளில் மட்டுமே வந்துள்ள எல்வின் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், காமெடி, எமோஷன் என அனைத்தும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் -கேஎஸ் ரவிக்குமார் மற்றும் எல்வின் முதல்முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தின் பூஜை
இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கும் கேஎஸ் ரவிக்குமார் எப்படி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது.