மனதில் வைராக்கியம் வைத்தால் முடிக்காமல் விடமாட்டார்... விஜய் குறித்து பகிர்ந்த பிரபல இயக்குநர்

சென்னை : நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது. இளம் இயக்குநர்களுக்கு அவர் தற்போது வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அவர்களும் விஜய்யின் ரசிகர்களாக அவரை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்டி வருகின்றனர். இதன்மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் மாஸ்டர், பீஸ்ட் என இளம் இயக்குநர்களின் கைவண்ணத்தில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் அவர் குடி உள்ளிட்ட பழக்கங்களுடன் இருக்கும் நிலையில், வில்லனான விஜய் சேதுபதி எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாமல் இருப்பார்.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

இது விஜய்யின் மாஸ் தனத்தை குறைத்ததாக என்ற சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், அவரை வித்தியாசமாக காண்பிக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றார் என்றே கூறவேண்டும். ரசிகர்கள் இந்தக் கேரக்டரை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து படத்தில் சீர்த்திருத்த பள்ளியில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு, அதை தொடர்ந்த விஜய்யின் செயல்பாடுகள் என கதை நகரும்.

பீஸ்ட் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

பீஸ்ட் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

இந்தப் படம் சிறப்பாக வெற்றிப் பெற்றது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான பீஸ்ட் படமும் விஜய்யை மாஸாகவே காண்பித்தது. படத்தின் திரைக்கதை, அதையொட்டிய காட்சிகள் என சில லாஜிக் மீறல்கள் படத்தில் இருந்தாலும் இந்தப் படத்தையும் விஜய்க்காகவே அவரது ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது படம் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

கலக்கல் காமெடி

கலக்கல் காமெடி

விஜய்யின் ஆரம்ப கால படங்கள், கல்லூரி மாணவராக, ஆக்ஷன் ஹீரோ என பல கெட்டப்புகளில் அவர் நடித்த நிலையில், அவரால் காமெடியிலும் கலக்க முடியும் என்பதை நிரூபித்த படம் மின்சார கண்ணா. இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அவர் காதல், காமெடி என கலக்கியிருப்பார் விஜய்.

கேஎஸ் ரவிக்குமார் பாராட்டு

கேஎஸ் ரவிக்குமார் பாராட்டு

இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் மின்சார கண்ணா படத்தில் காமெடி கேரக்டர் தனக்கு வேண்டும் என்று விஜய் கேட்டு நடித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்தில் நடந்த பாடல் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடித்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தவறிய விஜய்யை இயக்கும் வாய்ப்பு

தவறிய விஜய்யை இயக்கும் வாய்ப்பு

அடுத்ததாக இரண்டு முறை விஜய்யை இயக்கும் சந்தர்ப்பம் தனக்கு கைநழுவியதாகவும், எதிர்காலத்தில் அவரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அப்படி கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து நடிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய் வைராக்கியம் மிகுந்தவர்

விஜய் வைராக்கியம் மிகுந்தவர்

தொடர்ந்து பேசிய ரவிக்குமார், விஜய் மிகவும் வைராக்கியம் மிகுந்தவர் என்றும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதை முடிக்காமல் விடமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் திறமையானவர் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். மின்சாரக் கண்ணா படத்தில் விஜய்யுடன் குஷ்பூ, ரம்பா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X