»   »  தாய்லாந்தில் கும்கி 2?

தாய்லாந்தில் கும்கி 2?

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு - லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த படம் கும்கி.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன், ஜோ.மல்லூரி என பலருக்கு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தது. இந்த படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் எடுக்கவிருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பிரபுசாலமன்.

Kumki 2 to be shot in Thailand

தொடரி படம் முடிந்த கையோடு கும்கி2 ஐ எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவர்களில் விக்ரம் பிரபு மட்டும் இதுவரை இரண்டாம் பாகத்துக்காக உறுதி செய்யப்பட்டிருக்கிறார். கும்கிக்கு பிறகு அவ்வளவு பெரிய வெற்றியை இதுவரை பார்க்காத விக்ரம்பிரபு கும்கி2 வில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

சென்ற முறை கேரளாவில் அதிகம் படமாக்கப்பட்ட கும்கி, இந்த முறை தாய்லாந்தை நோக்கிச் செல்கிறது. வெள்ளை யானை பற்றிய படம் என்பதால் வெள்ளை யானைகள் அதிகம் சூழ்ந்திருக்கும் தாய்லாந்தில் முழுப் படத்தையும் படமாக்கவிருக்கிறார் பிரவுசாலமன்.

தொடரி படம் ரிலீஸுக்கு பிறகு பட்ஜெட் மற்றும் பிற நடிக, நடிகைகள் முடிவு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

English summary
Sources say that Prabhu Solomon is planning to make Kumki 2 in Thailand.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos