»   »  கும்கி-2: மீண்டும் விக்ரம் பிரபுவை இயக்கும் பிரபு சாலமன்!

கும்கி-2: மீண்டும் விக்ரம் பிரபுவை இயக்கும் பிரபு சாலமன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்கி- 2 படம் விரைவில் தொடங்கப்படும் என நடிகர் விக்ரம் பிரபு கூறியிருக்கிறார்.

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விக்ரம் பிரபு தொடர்ந்து அரிமாநம்பி, இவன் வேறமாதிரி போன்ற படங்கள் மூலம் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.


Kumki Sequel start very Soon says Vikram Prabhu

கடைசியாக விக்ரம் பிரபு நடித்து வெளியான வெள்ளைக்கார துரை பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை. இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.


வாகா, வீர சிவாஜி, முடி சூடா மன்னன் என ஒரே நேரத்தில் 3 படங்கள் தற்போது விக்ரம் பிரபு கைவசம் உள்ளன. இந்நிலையில் கும்கி 2 விரைவில் தொடங்கப்படும் என இவர் தெரிவித்திருக்கிறார்.


இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ''கும்கி படத்துக்குப்பின் நானும், பிரபு சாலமன் சாரும் கும்கி 2 வில் மீண்டும் இணைகிறோம்.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்'' என்று கூறியிருக்கிறார்.


முதன்முறையாக பெரிய பட்ஜெட்டில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் தொடரி விரைவில் வெளியாகவுள்ளது. காடு, மலை, கடல் என வழக்கமான விஷயங்களைக் கடந்து முழுக்க, முழுக்க டிரெயினில் இப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
''Kumki Sequel starts very Soon'' Actor Vikram Prabhu says in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil