»   »  நெட்டிசனால் போலீசாரிடம் சிக்கிய பெரிய இடத்து மாப்பிள்ளை நடிகர்

நெட்டிசனால் போலீசாரிடம் சிக்கிய பெரிய இடத்து மாப்பிள்ளை நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய நடிகர் குணால் கேமு நெட்டிசன் ஒருவரால் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகரும், நடிகை சோஹா அலி கானின் கணவருமான குணால் கேமுவுக்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேமு மும்பையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்றுள்ளார்.

Kunal Khemu fined for riding a bike without helmet

அவரை பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.

அந்த ட்வீட்டை பார்த்த மும்பை போலீசார் குணால் கேமுவுக்கு அபராதம் விதித்து இ சலான் அனுப்பியுள்ளனர். இதையடுத்து கேமு மன்னிப்பு கேட்டுள்ளார்.

முன்னதாக மும்பை சிக்னலில் கார் ஜன்னல் வழியாக எட்டிக் கொண்டு ரசிகையுடன் செல்ஃபி எடுத்த நடிகர் வருண் தவானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருணும் ஆன்லைன் புகார் மூலம் தான் சிக்கினார்.

English summary
Mumbai police have issued an e-challan to actor Kunal Khemu for riding a two wheeler in the city without a helmet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X