twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குந்தவை சோழ நாட்டு பெண் இல்லை..சோழர்களை ஏமாற்றிவிட்டார்.. வெளியான புது தகவல்!

    |

    சென்னை : குந்தவை சோழ நாட்டு பெண் இல்லை,அவர் சோழர்களை ஏமாற்றி விட்டார் என்று புது தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த புத்தகத்தை படித்தவர்களும், படிக்காதவர்களும் படத்தை பாராட்டினாலும், இன்னொரு தரப்பினர் படம் சுமாராகவே இருப்பதாக கூறுகின்றனர்.

    வந்தியத்தேவனுடன் பயணிக்கும் கதையில், கதைக்காகவே எந்த வித கற்பனையும் இல்லாமல் கதை அழகாக நகர்கிறது.

    மருதாணியில் குந்தவை முகம்.. என்ன க்யூட்டா போட்டுருக்காங்க பாருங்க! மருதாணியில் குந்தவை முகம்.. என்ன க்யூட்டா போட்டுருக்காங்க பாருங்க!

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கி உள்ளார். இதில் முதல் பாகம் வெளியாகி சக்கை போட்டு வருகிறது. இதில் நயவஞ்சகியாக வரும் நந்தினி சோழர்களை பழிவாங்க 74 வயது முதியவரான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு ராஜ்ஜியத்தை கைப்பற்ற தந்திரமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

    நந்தினி பாண்டிய நாட்டுபெண்?

    நந்தினி பாண்டிய நாட்டுபெண்?

    அதித்த கரிகாலன் காதல் விவகாரம் தெரிந்ததும் அரண்மனையை விட்டு வெளியேறிய நந்தினி எங்கு சென்றார். வீரபாண்டியனுடன் அந்த குடுசையில் ஏன் இருந்தார், பாண்டியர்களுக்கு அவர் உதவி செய்ய என்ன காரணம் என கேள்விகள் நம்மிடம் எழுந்துள்ளது. நந்தினி பாண்டிய நாட்டை சேர்ந்தவர் என்பதை மீன் சின்னம் கொண்ட வாளை கையில் எடுத்து உறுதிப்படுத்தி விட்டார் நந்தினி.

    குந்தவை சோழரே இல்லை

    குந்தவை சோழரே இல்லை

    இந்நிலையில்,தற்போது குந்தவையும் சோழ நாட்டு பெண் இல்லை,அவள் சோழர்களை ஏமாற்றிவிட்டார் என்ற புது தகவலை நெட்டிசன்ஸ்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது த்ரிஷா தெஞ்சில் மீன் சின்னம் போட்ட டாட்டூ போட்டோவை ஷேர் செய்து, "மீன் டாட்டூ போட்டு இருக்காங்க குந்தவை".. குந்தவையா நடிச்ச த்ரிஷாவும் பாண்டிய நாடுனு வெளியில பேசிக்கிறாங்க என்று கிண்டலடித்துள்ளனர். மீம் கிரியேட்டர்களின் இந்த மீம் டிராண்டாகி வருகிறது.

    வாரிக்குவிக்கும் வசூல்

    வாரிக்குவிக்கும் வசூல்

    படத்திற்கு வசூல் குவிந்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் குறித்தான வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதன் படி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    English summary
    Ponniyin Selvan I has been released on September 30 worldwide. meme Creators trolled trisha
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X