»   »  இன்னா பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. இது நடக்கணுமாம்! #KuppathuRajaTeaser

இன்னா பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. இது நடக்கணுமாம்! #KuppathuRajaTeaser

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் 'குப்பத்து ராஜா'. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆர்.பார்த்திபன், பூணம் பாஜ்வா, பல்லக் லால்வானி, யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

'குப்பத்து ராஜா' படத்தின் டீசர் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் குப்பம் போல செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Dance master Baba Bhaskar's directorial debut in 'Kuppathu Raja'. GV Prakash, R. Parthipan, Poonam Bhajwa, Pallak Lalwani, Yogibabu, MS Bhaskar and many others playing in this film. GV Prakash has composed the music for this film. Actor Sivakarthikeyan released 'Kuppathu Raja' teaser on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil