குறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல? நல்ல பாடம்!

சென்னை: ஆரி சம்யுக்தாவின் தாய்மை பற்றி தப்பாக பேசினாரா? என்பதை சம்யுக்தாவுக்கு எடுத்துரைக்க கமல் போட்ட குறும்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த பிக் பாஸ் சீசனின் முதல் குறும்படம் இது என்பதால், ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர்.

ஆரியின் ஆர்மியினரும், சம்யுக்தா மற்றும் அர்ச்சனாவின் முகத்திரை கிழிந்ததை எண்ணி கொண்டாடி வருகின்றனர்.

தாய்மை பற்றி

தாய்மை பற்றி

தனது தாய்மை (Motherhood) பற்றி ஆரி தப்பாக பேசிட்டார். அவன் யாரு தப்பா பேசலாம் என சம்யுக்தா கேட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அந்த பிரச்சனையை கையில் எடுத்து ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் கமல் பேசினார். அதனை தொடர்ந்து ஒரு குறும்படமும் போட்டு சம்யுக்தாவுக்கு சவுக்கடி கொடுத்தார்.

படமும் பாடமும்

படமும் பாடமும்

இது குறும்படம் இல்லை அர்ச்சனா சொன்ன மாதிரி குருமா படமும் இல்லை. படம் சிலருக்கு பாடம் என பேசிய கமல், குறும்படத்தை போட்டுக் காண்பித்தார். குறும்படம் போட்டால், நம்ம நிலை கந்தல் தான் என நினைத்த சம்யுக்தா, பெருமூச்சு விட்டு நிசப்தமாக ஆகி விட்டார்.

சம்யுக்தாவை உயர்த்தி

சம்யுக்தாவை உயர்த்தி

சம்யுக்தாவின் தாய்மையை தாழ்த்தி ஆரி பேசினார் என்றே குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு இருந்தார். ஆனால், குறும்படத்தில், ஆரி அப்படி பேசவே இல்லை. மேலும், சம்யுக்தாவின் மதர்வுட்டை கேள்வி எழுப்பாமல், அந்த அளவுக்கு மெச்சூரிட்டியானவங்க இப்படி பேசலாமா? என்று தான் பேசி இருந்தார்.

ஸ்கெட்ச் அர்ச்சனாவுக்கு

ஸ்கெட்ச் அர்ச்சனாவுக்கு

சம்யுக்தாவுக்குத் தான் குறும்படம் மூலம் ஸ்கெட்ச் என பார்த்தால், அர்ச்சனா பலி ஆடாக மாறிவிட்டார். சம்யுக்தாவுடன் சேர்ந்து கொண்டு, தாய்மை பற்றி ஆரி எப்படி பேசலாம் என சம்யுக்தாவை தூண்டி விட்டதே அர்ச்சனா தான் என்பதை ஆரி புரிந்து கொள்ளவே இந்த குறும்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு பஞ்சாயத்து

வளர்ப்பு பஞ்சாயத்து

தாய்மை பஞ்சாயத்தை முடித்து வைத்த கமல், வளர்ப்பு பிரச்சனையை கையில் எடுத்து சம்யுக்தாவை நல்லாவே வெளுத்து வாங்கினார். பழைய பிக் பாஸ் சீசன் கமலாகவே மாறிவிட்டார். இதைத்தான் ரசிகர்களும் விரும்புகின்றனர் என கமலை நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

MUSIC DIRECTOR ஆன அனுபவம் |CLOSE CALL WITH SINGER V.V.PRASANNA | FILMIBEAT TAMIL
மன்னிப்பு கேட்ட சம்யுக்தா

மன்னிப்பு கேட்ட சம்யுக்தா

குறும்படம் பார்த்து விட்ட பிறகு ஆரியை பற்றியும் குறும்படம் குறித்து ஹவுஸ்மேட்களிடம் கமல் கேட்டார். தனது தவறை ஒப்புக் கொண்ட சம்யுக்தா, ஆரியிடம் மன்னிப்பு கேட்டார். அர்ச்சனா உடனடியாக, உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா லோ பெட்டுக்கு வாங்க, நாம பேசலாம் என ஆரியையும் தன் குரூப்பில் சேர்க்க பார்த்ததை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே கடுப்பானார்கள்.

குடும்பத்தை இழுக்காதீங்க

குடும்பத்தை இழுக்காதீங்க

சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டிய கமல், பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன், யாரும் இவங்கள ட்ரோல் பண்றதுக்காக இவங்களோட குடும்பத்தை இழுத்து பேசாதீங்க என மக்களுக்கும் அட்வைஸ் கொடுத்தார். இந்த படத்தை கால் போட்டு பாடமாக்கிக் கொள்ளுங்கள் என போட்டியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X