»   »  குருதிப்பூக்கள்: அதீத ஆர்வத்தால் மணிரத்னத்தையே தெறிக்க விட்ட ரசிகர்கள்

குருதிப்பூக்கள்: அதீத ஆர்வத்தால் மணிரத்னத்தையே தெறிக்க விட்ட ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம்-கார்த்தி படத்திற்கு டைட்டில், போஸ்டரை ரசிகர்களே வெளியிடும் அளவுக்கு அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நடிக,நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Kuruthi Pookkal Fans Made Poster

இந்நிலையில் 'குருதிப்பூக்கள்' என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் இன்று காலை இணையதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.

மேலும் ரத்தம் சிந்திய நிலையில் ஒரு ரோஜாப்பூவுடன், துப்பாக்கி இடம்பெற்றிருப்பது போல இப்போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனால் காதல்+கேங்க்ஸ்டர் என்ற ரீதியில் 'ரோஜா' போன்று இப்படத்தின் கதை இருக்கும் என ஆளாளுக்கு இப்படத்திற்கு கதை சொல்ல ஆரம்பித்தனர்.

இந்நிலையில் மணிரத்னம் இதுபோல எந்த ஒரு போஸ்டரையும் வெளியிடவில்லை என்னும் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தப் போஸ்டரில் நாயகன் கார்த்தியின் பெயர் இடம்பெறவில்லை எனினும் மணிரத்னம், மெட்ராஸ் டாக்கீஸ், ஏ.ஆர்.ரகுமான் என இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திலிருந்து சாய் பல்லவியை நீக்கி விட்டதால், தற்போது நாயகி தேடும் பணியில் மணிரத்னம் மும்முரமாக இறங்கியுள்ளார்.

English summary
Fans Made Mani Ratnam - Karthi's next movie Poster.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil