»   »  தொழில்முறை அணுகுமுறை தெரியாதவர்!- ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாக தாக்கிய குஷ்பு

தொழில்முறை அணுகுமுறை தெரியாதவர்!- ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாக தாக்கிய குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்முறை அணுகுமுறை தெரியாதவர் என ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் நடிகை குஷ்பு.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக ஒப்பந்தமான ஸ்ருதி ஹாஸன், திடீரென விலகிக் கொண்டார். காரணம், தனக்கு முழுமையாக ஸ்க்ரிப்ட் தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

விளக்கம்

விளக்கம்

இந்த நிலையில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த குஷ்பு, நேற்று ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாக சாடியுள்ளார்.

சங்கமித்ரா

சங்கமித்ரா

சங்கமித்ரா போன்ற சரித்திரப் படங்களை சரியான திட்டமிடல் இல்லாமல் எடுக்க முடியாது. ஷூட்டிங் என்பது 30 சதவீதம்தான். மற்றதெல்லாம் ஷூட்டிங்குக்கு முந்தைய பணிகள்தான்.

தொழில்முறை அணுகுமுறை

தொழில்முறை அணுகுமுறை

தங்கள் குறைகளை மறைத்து, தயாரிப்பாளர்களைக் குறை சொல்லக் கூடாது. கௌரவமான பாரம்பரியத்தைத் தொடர்பவர்களிடம் தொழில்முறை அணுகுமுறையை எதிர்ப்பார்க்கிறேன். உங்கள் தவறுகளை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்வது எதிர்காலம் நன்றாக இருக்க உதவும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

கௌரவமான பாரம்பர்யத்தைத் தொடர்பவர் என் குஷ்பு குறிப்பிட்டுள்ளது ஸ்ருதி ஹாஸனைத்தான். நேரடியாக அவர் பெயரைக் குறிப்பிடாமல் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ருதி ஹாஸன் விலகல் அந்தப் படத்துக்கு கவுரவக் குறைவை ஏற்படுத்திவிட்டதாக குஷ்பு கருதுவதால் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Actress Kushbhu has slammed Shruthi Hassan indirectly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil