»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தல்... ஒதுங்கினார் குஷ்பு!

தயாரிப்பாளர் சங்க தேர்தல்... ஒதுங்கினார் குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் காங்கிரஸில் கொஞ்சம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அல்லது தானாக ஒதுங்கியிருக்கும் குஷ்பு இன்னொரு பக்கம் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும் விஷாலுக்கும் பஞ்சாயத்து ஓடுகிறது. வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தங்கள் அணி சார்பில் குஷ்பு தலைவர் பதவிக்கு களம் இறங்குவார் என விஷால் அறிவித்தார். இதையே குஷ்புவும் ஆமோதிக்க முதன்முறையாக தேர்தல் களத்தில் குஷ்பு என்று மீடியாக்கள் பரபரப்பாகின.

Kushbhu withdraws from producer council election

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் குஷ்பு போட்டியில் இருந்து விலகி விட்டாராம். விஷால் ஆரம்பத்தில் தங்கள் அணி சார்பில் என்று சொன்னாலும் அணியில் இருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலையிட விருப்பம் இல்லையாம். குஷ்பு திமுக அனுதாபி, காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவரானால் மாநில அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவது சிரமம். எனவே குஷ்புவை ஆதரிப்பதில் விஷாலுக்கு நெருக்கமானவர்களே தயக்கம் காட்டினார்கள்.

குஷ்புவும் இந்த நேரத்தில் தேர்தலில் நின்று தோல்வியடைந்தால் அது டெல்லி தலைமைக்கு கசப்பை ஏற்படுத்தலாம் என்று யோசித்திருக்கிறார். எனவேதான் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டாராம்.

English summary
Actress Kushboo has withdrawn from Producer Council Election.
Please Wait while comments are loading...