»   »  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஜகா வாங்கிய குஷ்பு!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஜகா வாங்கிய குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எந்த பதவிக்கும் நான் போட்டியிடவில்லை என நடிகை குஷ்பு கூறினார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் விஷால் அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.

Kushbhu withdraws from Producers Council election

இப்போது, விஷால் மீதான சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதையடுத்து விஷாலே தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு கமல் முன்மொழிந்திருக்கிறார். ஆனால் விஷால் போட்டியிட தயாரிப்பாளர் சங்கத்தின் பல பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, விஷால் அணியில் குஷ்பு பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாகக் கூறப்பட்டது.

அதை மறுத்துள்ள குஷ்பு, 'தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை. என்னால் 100 சதவீதம் நேரம் ஒதுக்க முடியாது," என்று கூறியுள்ளார். அதேநேரம் விஷால் அணிக்கு தன் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Kushbhu has denied that she couldn't contest in any post in Producers Council election.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil