»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

எவர்கிரீன் குஷ்பு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வெள்ளித் திரையில் காலடி எடுத்துவைக்கிறார்.

கரகாட்டக்காரி என்ற படத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடிக்கப் போகிறார் குஷ்பு.படத்துக்கு இசை இளையராஜா.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கரகாட்டக்காரப் பெண்ணின் உண்மைக் கதையைத் தான்படமாக்கப் போகிறார்களாம்.

லண்டன் ஷோபன், ஜெயலட்சுமி மணிசாமி ஆகியோர் துவக்கியுள்ள ஸ்ரீ நிதி ஆர்ட்ஸ் நிறுவனம்இந்த கரகாட்டக்காரியை தயாரிக்கிறது. ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜை, அதைத் தொடர்ந்து கடந்தவாரம் பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் பாடல் பதிவுடன் படத் தயாரிப்பு தொடங்கியது.

அன்று, பதிவு செய்யப்பட்ட முதல் பாடலின் டியூனே அதிரடியாக இருந்ததாக சொல்கிறார்கள்.இளையராஜாவே கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சம் ஆடினாராம்.

படத்தில் மொத்தம் 9 பாடல்கள். இளையராஜாவின் பேவரிட்டான வாலி, முத்துலிங்கம், மு.மேத்தா,காமகோடியான் ஆகியோரும் டாக்டர் கிருதியா, டாக்டர் முத்து செல்வக்குமார் மற்றும் புண்ணியாஆகிய புதுமுகங்களும் தலா ஒரு பாடலை எழுதியிருக்கிறார்கள்.

கரகாட்டக்காரனைப் போலவே மெலடி, நாட்டுப்புற இசை கலந்த பாடல்களாம் இவை.

இசைக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கே முக்கிய ரோல் என்பதால் யாரைப் போடுவது என்றுமிகவும் யோசித்து குஷ்புவை இறக்கிவிட்டுள்ளார்களாம். 2 குழந்தைகளுக்குத் தாயான நிலையிலும்கலங்கடிக்கும் ஆட்டம் போடத் தயார் என்று ஒப்புக் கொண்டே அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்குஷ்பு.

படத்தை இயக்கப் போவது பாரதி கண்ணன். கரகாட்டக்காரனில் நடித்த கவுண்டமணி, செந்தில்,கனகா, காந்திமதி, சண்முகசுந்தரம், வினுச் சக்கரவர்த்தி என பெரும்பாலான கலைஞர்கள் மீண்டும்நடிக்கப் போகிறார்களாம்.

குஷ்புவுக்கு ஜோடியாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்த ஸ்ரீதர் நடிக்கிறார். இதில்இன்னொரு கரகாட்டக்காரியாக விலாசினி நடிக்கிறார் (விபச்சார வழக்கில் சிக்கி வெளியேவந்தவர்).

மதுரை, குற்றாலம் மற்றும் சுத்துப்பட்டு கிராமங்களில் சட்டுபுட்டு என்று படப்பிடிப்பை நடித்திமுடித்து டிசம்பரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கரகாட்டக்காரனில் ராஜா போட்ட இசைக்கு ஆடாத கால்களும், அதில் கவுண்டமணி-செந்தில்ஜோடியின் ராவடிக்கும் குலுங்காத வயிறுகளும் தமிழகத்தில் இல்லை.

கரகாட்டக்காரி மூலம் இவர்கள் மீண்டும் ஒரு முறை உங்களை உலுக்கி எடுக்கப் போகிறார்கள்என்கிறார் இயக்குனர்.

இப்போது ஜெயா டிவியில் பெண்களுக்கான நிகழ்ச்சி நடத்தி வரும் குஷ்புவுக்கு சினிமாவில் இதுநிச்சயம் ரீ-எண்ட்ரியாக அமையும் என்கிறார்கள்.

இன்னொரு விஷயம், படத்துக்கு கரகாட்டக்காரி என்று பெயர் சூட்டியதே இசைஞானி தானாம்.

அண்ணே, எல்லாம் சரிதான். ஆனா, லிப்ஸ்டிக் ராமராஜன விட்டுட்டீங்களே !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil