»   »  சின்னத்திரை நடிகர் சங்கம்: வளர்ச்சிக்காக நன்கொடைகளை அள்ளி வழங்கிய ஜே.கே.ரித்தீஷ், குஷ்பூ

சின்னத்திரை நடிகர் சங்கம்: வளர்ச்சிக்காக நன்கொடைகளை அள்ளி வழங்கிய ஜே.கே.ரித்தீஷ், குஷ்பூ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நடிகை குஷ்பூ, ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் புதிய உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

Kushboo and JK Rithesh Donation

இதில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, டைரக்டர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி மற்றும் சங்க நிர்வாகிகள், சின்னத்திரை நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக ரூ.5 லட்சத்தை ஜே.கே.ரித்தீஷும், ரூ 1 லட்சத்தை நடிகை குஷ்பூவும் வழங்கினர்.

மேலும் நலிவடைந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய குஷ்பூ "நான் எப்போதும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு துணையாக இருப்பேன். இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்வேன்" என்று உறுதி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் சின்னத்திரை சங்க கட்டிடம் கட்டுவது, சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    English summary
    Kushboo and JK Rithesh Donate Money for Small Actor Association.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil