»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை குஷ்புவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலில் ஆபரேசன் நடந்தது.

சென்ற வாரம் குஷ்பு குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் காலில் அடிபட்டு, வலியும் வீக்கமும் உண்டானாது.இருந்தாலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி என்பதால், மலேசியாவில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில்கணவர் சுந்தர் துணையுடன் கலந்து கொண்டார்.

விழா மேடைக்கு நொண்டியபடியே சென்று பேசினார். ஆனால், வலி அதிகமாகவே அவசரமாய் சென்னைதிரும்பினார். விமானத்தில் இருந்து வீல்சேரில் வந்திறங்கும் அளவுக்கு வலி அதிகமானது. இதனால் நேராகஅப்போலா மருத்துவமனைக்கு குஷ்பு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் குஷ்புவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்துஉடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன்பின் வீடு திரும்பிவிட்ட குஷ்பு இப்போது ஓய்வில் இருந்துவருகிறார்.

Please Wait while comments are loading...