‘டிடி‘க்கே கட்டிப்புடி வைத்தியமா?..இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்!

சென்னை : பிரபல தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகை திவ்ய தர்ஷினி நடிகை குஷ்புவுடன் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் டிடி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர் திவ்யதர்ஷினி.

கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் அவரது ஸ்டைலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பக்கா எண்டெர்டெய்னரான டிடிக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.\

திவ்யதர்ஷினி

திவ்யதர்ஷினி

நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். விசில், பா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.

இறுக்கமாக கட்டிபிடித்தார்

இறுக்கமாக கட்டிபிடித்தார்

டிடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள டிடி அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா திருமணத்திற்கு சென்ற டிடி ஷாருக்கானை இறுக்கமாக கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை ஷேர் செய்திருந்தார். மேலும், நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், இவ்வளவு வருஷங்கள், பல நினைவுகள், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சி மிகவும் அதிகம். உங்கள் மனமகிழ்ச்சிக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.

பான் இந்திய தொகுப்பாளினி

பான் இந்திய தொகுப்பாளினி

அதேபோல ரன்பீர் கபூரின் ஷாம்ஷரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி ரன்பீர் கபூருடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் பார்த்த ரசிகர்கள் டிடி பான் இந்திய தொகுப்பாளினியாகிவிட்டதாக கூறி அவரை கலாய்த்து வந்தனர்.

கட்டிப்புடி வைத்தியமா?

கட்டிப்புடி வைத்தியமா?

இந்நிலையில், திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சியில் நடிகை குஷ்புவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ''My angel..DhivyaDharshini'' என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்டுகள் இணையத்தில் குவிந்து வரும் நிலையில், 'டிடி'க்கே கட்டிப்புடி வைத்தியமா? என இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X