»   »  கணவருக்கு ஒண்ணுதான்... புதுமுகங்களுக்கு ரெண்டு!- குஷ்புவின் புதுப்பட அறிவிப்பு

கணவருக்கு ஒண்ணுதான்... புதுமுகங்களுக்கு ரெண்டு!- குஷ்புவின் புதுப்பட அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்து மூன்று புதிய படங்களைத் தயாரிக்கப் போவதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார்.

இவற்றில் தன் கணவர் சுந்தர் சி ஒரு படத்தை இயக்குவார் என்றும், மற்ற இரு படங்களை இயக்கும் வாய்ப்பு புதுமுகங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் பிஸியாக இருக்கும் குஷ்பு, ‘அவ்னி சினி மேக்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.

சுந்தர் சி

சுந்தர் சி

இதுவரை ‘கிரி', ‘ரெண்டு', ‘நகரம் மறுபக்கம்', ‘கலகலப்பு', ‘தீயா வேலை செய்யனும் குமாரு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இந்த படங்களையெல்லாம் அவரது கணவரான இயக்குனர் சுந்தர்.சிதான் இயக்கியிருந்தார்.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

இப்போது முதன்முதலாக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதாக குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கணவருக்கு ஒரு படம்

கணவருக்கு ஒரு படம்

அதில், "இந்த வருடத்தில் எனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் 3 படங்களை தயாரிக்க உள்ளேன். இதில் ஒரு படத்தை எனது கணவர் சுந்தர்.சி இயக்கவுள்ளார். மற்ற இரண்டு படங்களிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

அரண்மனை 2

அரண்மனை 2

சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஆம்பள'. இப்படத்திற்கு பிறகு ‘அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை குஷ்பு தயாரிக்கிறார். புதுமுகங்கள் இயக்கும் படங்கள் குறித்து பின்னர் அறிவிக்கவிருக்கிறார்களாம்.

English summary
Actress Kushboo has announced her plans to produce 3 new movies with her husband Sundar C and 2 debutant directors.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil