Kushboo Daughters: குஷ்பு பொண்ணுங்க இவ்வளவு ஸ்லிம் ஆகிட்டாங்களே.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சூப்பர்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் தம்பதிகளில் பலரது கவனத்தையும் நன்மதிப்பையும் பெற்ற தம்பதிகள் என்றால் அந்த பட்டியலில் நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி தம்பதியர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. இவர்களின் சினிமா வாழ்க்கையைக் கடந்து இவர்களின் குடும்ப நடவடிக்கைகள் பர்சனல் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது தொடர்பான புகைப்படஙகளை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் குஷ்பு - சுந்தர் சி-யின் இரண்டு மகள்களும் உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம்மாக உள்ளனர்.
குஷ்பு - சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் பல திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதை பலரும் பார்த்துள்ளனர். இது மட்டும் இல்லாமல், குஷ்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்தும் வருவார். இதனால் இவர்களின் மகள்கள் யார் என்ற அடையாளம் ரசிகர்கள் பலருக்கும் தெரியும்.

இவர்கள் இருவர் குறித்தும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான தகவல், மூத்த மகள் அவந்திகா அவரது தந்தையைப் போல இயக்குநர் ஆகவுள்ளார் என்றும், இளையமகள் அனந்திதா தாயைப் போல நடிகையாக உள்ளார் என்றும் திரைத்துறையில் வேகமாக தகவல்கள் பரவியது. மேலும் மூத்த மகள் இயக்கும் படத்தையும், இளைய மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தையும் குஷ்பு - சுந்தர் சியின் தயாரிப்பு நிறுவனமான ஆவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

குஷ்பு மகள்கள்: இந்நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தங்களது இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் குஷ்புவின் மகள்கள் இருவரும் செம ஸ்லிம்மாக இருக்கிறார்கள். அவந்திகா மற்றும் அனந்திதா முன்பு இவ்வளவு ஸ்லிம்மாக இல்லையே, இப்போது இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்து விட்டார்களே என்று இணையவாசிகள் பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் இந்த புகைப்படம் தற்போது இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் ஃபேமிலி கோல் என்றால் இதுதான் போலயே என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். பல மாதங்களுக்கு முன்னர் குஷ்பு தனது உடல் எடையைக் குறைத்த நிலையில், தற்போது அவரது மகள்களும் உடல் எடையைக் குறைத்துள்ளனர்.
சுந்தர் சி பேச்சு: அண்மையில் சுந்தர் சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூட நான் சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் இருக்கிறேன். மக்கள் எனக்கு இரண்டு அடையாளங்கள் தான் கொடுக்கிறார்கள். ஒன்று குஷ்பு புருஷன், இன்னொன்று தலைவரை வைத்து அருணாச்சலம் படம் எடுத்திருக்கிறேன் என்பதால் அருணாச்சலம் டைரக்டர் என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். சினிமா பார்வை, சினிமாவில் அரசியல் தேடும் ரசிகர்கள் பலரும் அவரது அன்பே சிவம் படத்தை பாராட்டி அவரை அன்பே சிவம் படத்தின் இயக்குநர் என்று அடையாளம் காணும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











