»   »  45 வது பிறந்தநாளை உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த "குஷ்பூ"

45 வது பிறந்தநாளை உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த "குஷ்பூ"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்த நடிகை குஷ்பூ இன்று 45 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். 1988ம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

தனது நடிப்புத் திறமையால் சுமார் 25 வருடங்களாக திரையுலகில் நீடித்து வரும் குஷ்பூ, இதுவரை தமிழ் சினிமாவில் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

இன்று தனது 45 வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் குஷ்பூ. குஷ்பூவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இருந்து சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

நான் வாழ்வதும்

நேற்று இரவு நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை பதிவிட்டு "என்னுடைய குடும்பம் தான் என்னுடைய உலகம் நான் வாழ்வதும், மடிவதும் அவர்களுக்காகத் தான்" என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் குஷ்பூ.

நண்பர்களுக்கு பிறந்த நாள் விருந்து

தன்னுடன் உடன் நடித்த நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு உயர்தர உணவகம் ஒன்றில் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் குஷ்பூ. இந்த விருந்தில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, மோகன், ரகுமான், ராம்கி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

தனி ஒருவன் நாயகன் ஜெயம் ரவி " பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா. எங்களுடன் நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் உங்களின் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும் பெருக எனது வாழ்த்துக்கள்" என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக குவிந்த வாழ்த்துக்கள்

குஷ்பூவின் பிறந்தநாள் இன்று என்று தெரியாமல் நேற்று ஏராளமான நட்சத்திரங்கள் அவரை வாழ்த்த உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஆனால் இவற்றையெல்லாம் சேமித்து வைத்து நாளைக்கு வாழ்த்துங்கள். ஏனென்றால் நாளை தான் எனது பிறந்த நாள்" என்று குஷ்பூ வேண்டுகோள் விடுக்க பதிலுக்கு இன்று அவரை வாழ்த்தித் தள்ளியிருக்கின்றனர் அவரது ரசிகர்களும், நண்பர்களும்.

இன்று போல என்றும் நலமாக வாழ்க என்று நாமும் வாழ்த்துவோம். " பிறந்த நாள் வாழ்த்துக்கள் குஷ்பூ"

English summary
Kushboo turns 45. Kushboo Sundar celebrates her 45th birthday with friends and family Members.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil