For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கனவுக் கன்னியாக இருந்து தமிழ்நாட்டு மருமகளான குஷ்பு.... எப்பவுமே வைரல்தான்

  |

  சென்னை: நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இன்றைக்கும் வைரல் பேபியாக வலம் வருகிறார் குஷ்பு. குஷ்புவின் இளமைக்கால படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதனை ட்விட்டரில் பதிவிட்டவரே குஷ்புதான்.

  குஷ்பு இட்லி, குஷ்பு கோவில், குஷ்பு பெயரில் ஹோட்டல் என்று குஷ்புவுக்கு தனி கோட்டை கட்டியவர்கள் நம் தமிழ் ரசிகர்கள். 1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை சினிமா துறையிலும் சரி, தற்போது அரசியலிலும் சரி, ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பு. 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு எல்லாம் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு.

  குஷ்பு நடித்து வெளியான சின்னத்தம்பி திரைப்படம் யாராலும் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மஹாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பு, முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  தமிழகத்தின் கனவுக்கன்னி

  தமிழகத்தின் கனவுக்கன்னி

  தர்மத்தின் தலைவன் படம் தான் தமிழில் அவர் நடித்த முதல் படம். வருஷம் பதினாறு மிக பெரிய ஹிட் . தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த குஷ்பு

  அரசியல் பயணம்

  அரசியல் பயணம்

  இயக்குனர் சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். கடந்த 34 ஆண்டுளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வரும் குஷ்பு அரசியலில் கால்பதித்தார். தொடக்கத்தில் திமுகவில் இருந்தாலும் பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார் அன்று முதல் இன்று வரை காங்கிரஸில் தான் உள்ளார்.

  ட்விட்டரில் குஷ்பு

  ட்விட்டரில் குஷ்பு

  குஷ்புவை பொருத்தவரையில், தன்னை ஒரு நடிகையாக மட்டும் நினைக்காமல், பெண்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும் முன்னிறுத்திக் கொள்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து முதல் குரல் எழுப்புவர் இவர்தான். சமூக சிந்தனையாளர் என்று கூட கூறலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தது, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காக குரல் கொடுப்பார்.

  சின்னத்திரையில் குஷ்பு

  சின்னத்திரையில் குஷ்பு

  சின்னத்திரையில் மருமகள், ஜனனி, கல்கி, பாசமலர், நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் என பல சீரியலிலும் நடித்து வருகிறார். இதே போன்று ரியாலிட்டி ஷோவான, கோடீஸ்வரி, ஜாக்பாட், பூவா தலையா, ஜூட் ரெடி, அச்சம் தவிர், நம்ம வீட்டு மகாலட்சுமி, நினைத்தாலே இனிக்கும், சிம்ப்ளி குஷ்பு, நிஜங்கள், என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் குஷ்பு.

  வைரல் பேபி

  அப்படிப்பட்ட குஷ்பு தினமும் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் போஸ்ட் செய்து ரசிகர்களின் மனதை குஷி படுத்தி வருகிறார். குஷ்புவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தை ட்விட்டரில் பதிவிட்டரே குஷ்புதான்.

  English summary
  Kushboo is the first voice to voice outrage against women. This is why women think of Kushboo as one of their home members.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X