அரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு... குஷ்பு வெளியிட்ட அசத்தல் அப்டேட்

சென்னை : காமெடி, குடும்ப, பொழுதுபோக்கு பேய் படமாக அரண்மனை 3 படத்தை இயக்கி உள்ளார் சுந்தர்.சி. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமாக தயாராகி உள்ளது அரண்மனை 3. கடந்த ஆண்டே முடிக்கப்பட்டுவிட்ட இந்த படம், தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

அரண்மனை 3 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டது. மே 14 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை, லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டிருக்கிறது.

ஆர்யா, ஆண்டிரியா, ராஷி கன்னா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் 2020 ம் ஆண்டின் இறுதியிலேயே முடிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை குஷ்புவின் அவினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படக்குழு விரும்பாததால் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

யு/ஏ சான்றிதழ்

யு/ஏ சான்றிதழ்

அரண்மனை 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படத்தை ஆயுத பூஜை விடுமுறை வார இறுதி நாளில் மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த மாதம் பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு, ட்விட்டரில் நேற்று பகிர்ந்திருந்தார்.

குஷ்புவின் ட்விட்டர் அறிவிப்பு

குஷ்புவின் ட்விட்டர் அறிவிப்பு

குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், அரண்மனை 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அனைவரும் எதிர்பார்பிற்கும் ஏற்ப அடுத்த மாதம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. குடும்ப, பொழுதுபோக்கு, காமெடி, பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ள அரண்மனை 3 பண்டிகை தமாக்காவாக வெளியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

குஷ்புவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அரண்மனை 3 வெற்றி பெற படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் படத்தை ஆயுத பூஜைக்கு முன் நவராத்திரி காலத்திலேயே ரிலீஸ் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரிலீஸ் தேதி இது தான்

ரிலீஸ் தேதி இது தான்

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக அரண்மனை 3 படத்தை அக்டோபர் 14 ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் உடன், குஷ்புவின் அவினி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை வெளியிட உள்ளதாக குஷ்பு இன்று ட்விட்டரில் அறிவித்துள்ளார். படத்தின் புதிய போஸ்டருடன் இந்த தகவலை ரெட் ஜெயின்ட் மூவிசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் திமுக.,வில் குஷ்பு.,வா

மீண்டும் திமுக.,வில் குஷ்பு.,வா

உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ், அரண்மனை 3 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்ததை அடுத்து, மீண்டும் திமுக.,வில் இணைய போகிறீர்களா என குஷ்புவிடம் பலரம் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக.,வுடன் இணைய உள்ளதால் தான் பாஜக உடனான செயல்பாடுகளை குறைத்துக் கொண்டு, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறீர்களா என்றும் சிலர் கேட்டுள்ளனர்.

டிரெண்டிங்கில் அரண்மனை 3

டிரெண்டிங்கில் அரண்மனை 3

ரெட் ஜெயின்ட் மூவிஸ் உடன் இணைந்து அரண்மனை 3 படத்தை வெளியிட உள்ளதாக குஷ்பு அறிவித்த சில நிமிடங்களிலிலேயே அரண்மனை 3 என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது. இதில் ஏராளமானோர் அரசியல் ரீதியாக குஷ்புவிடம் கேள்வி கேட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆர்யா தான் பேயா

ஆர்யா தான் பேயா

இந்த படத்தில் ஆர்யா பேய் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆர்யா முதல் முறையாக பேய் ரோலில் நடிக்கும் படம் இது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில் அரண்மனை 3 படத்தில் ஆர்யா - ராஷி கன்னாவின் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, படுவைரலாகின.

விவேக்கின் கடைசி படம்

விவேக்கின் கடைசி படம்

இந்த படத்தில் சுந்தர்.சி உடன் விவேக், யோகிபாபு, மனோ பாலா, சாக்ஷி அகர்வால், சம்பத், வேல் ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் விவேக் முழுவதுமாக நடித்து முடித்த கடைசி படம் இது தான். இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X