»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் குஷ்பூ சுந்தர்!- விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் குஷ்பூ சுந்தர்!- விஷால் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.

இதனை விஷாலே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான குழு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை ஏற்றது. இதில் அம்மா கிரியேஷன் டி.சிவா, பைவ் ஸ்டார் கதிரேசன், பிஎல் தேனப்பன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்தனர்.

Kushbu to contest producers council president post

தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்து, வருகிற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி மீண்டும் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டும் பலர் தனி தனி குழுக்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடிகர் விஷால் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இதன் முதல் முயற்சியாக விஷால் தலைமையிலான அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு குஷ்பூ சுந்தர் போட்டியிடவுள்ளார் என்று விஷால் அறிவித்தார். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishal has announced that Kushbu would be contested for the president post of Producers Council

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil