யு/ஏ சான்று பெற்ற அரண்மனை 3...ரிலீஸ் தேதியை அறிவித்த குஷ்பு
சென்னை : சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமாக தயாராகி உள்ளது அரண்மனை 3. தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வது என சுந்தர்.சி உறுதியாக இருந்ததால், கடந்த ஆண்டே முடிக்கப்பட்டும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது.
காமெடி, த்ரில்லர், பேய் படமாக உருவாகி உள்ள அரண்மனை 3 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டது. மே 14 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை, லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டிருக்கிறது.
ஆர்யா, ஆண்டிரியா, ராஷி கன்னா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் 2020 ம் ஆண்டின் இறுதியிலேயே முடிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை குஷ்புவின் அவினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படக்குழு விரும்பாததால் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

யு/ஏ சான்றிதழ்
லேட்டஸ்ட் அப்டேட்டாக அரண்மனை 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படத்தை ஆயுத பூஜை விடுமுறை வார இறுதி நாளான அக்டோபர் 13 ம் தேதி மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த மாதம் பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

குஷ்புவின் ட்விட்டர் அறிவிப்பு
குஷ்பு பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், அரண்மனை 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அனைவரின் எதிர்பார்பிற்கும் ஏற்ப அடுத்த மாதம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பொழுதுபோக்கு, காமெடி, பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ள அரண்மனை 3 பண்டிகை தமாக்காவாக வெளியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
குஷ்புவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அரண்மனை 3 வெற்றி பெற படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் படத்தை ஆயுத பூஜைக்கு முன் நவராத்திரி காலத்திலேயே ரிலீஸ் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆர்யா தான் பேயா
இந்த படத்தில் ஆர்யா பேய் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆர்யா முதல் முறையாக பேய் ரோலில் நடிக்கும் படம் இது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில் அரண்மனை 3 படத்தில் ஆர்யா - ராஷி கன்னாவின் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, படுவைரலாகின.

விவேக்கின் கடைசி படம்
இந்த படத்தில் சுந்தர்.சி உடன் விவேக், யோகிபாபு, மனோ பாலா, சாக்ஷி அகர்வால், சம்பத், வேல் ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் விவேக் முழுவதுமாக நடித்து முடித்த கடைசி படம் இது தான். இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











