»   »  மிஸஸ் பிரசாத்-3க்கு ஜாமீன்

மிஸஸ் பிரசாத்-3க்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தின் 3வது மனைவியான குசுமுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை, புதுவையை மையமாகக் கொண்டு தென் மாநிலங்கள் முழுவதிலும் விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர் பிரசாத். அவரது கைக்குள் பிரபல நடிகைகள், அழகிகள் கட்டுப் பட்டுக் கிடந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தனது 3வது மனைவி குசுமுடன் வைத்துப் பிடிபட்டார் பிரசாத். இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் குசும்.

அதில், தான்பிரசாத்தின் மனைவி இல்லை என்றும் ராஜேஷ்குமார் என்பவரின் மனைவி என்றும் கூறியிருந்தார் குசும். இந்த மனு நீதிபதி கே.என். பாட்ஷாவின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, இன்று குசுமுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி ரூ. 5000 ரொக்க ஜாமீன், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினசரி மத்திய குற்றப் பிரிவு போலீஸில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ஜாமீன் கிடைத்து விட்டாலும் கூட குசுமுக்கு ரத்த சம்பந்தமான யாராவது இருவர் ஜாமீன் கொடுத்தால்தான் விடுதலையாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil