»   »  தேசிய விருது, சூப்பர்ஸ்டார் பாராட்டு: குஷியில் குற்றம் கடிதல் படக்குழு

தேசிய விருது, சூப்பர்ஸ்டார் பாராட்டு: குஷியில் குற்றம் கடிதல் படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது, சூப்பர் ஸ்டார் வாழ்த்துடன் குற்றம் கடிதல் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் படம் பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் அந்த படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. விருது அறிவிக்கப்பட்ட உடன் தான் பலரும் குற்றம் கடிதலா அப்படி ஒரு படமா என்று அவசர, அவசரமாக கூகுளில் தேடினர்.

கூகுள் செய்த பிறகே பலருக்கும் அப்படி ஒரு படம் ரிலீஸாக காத்திருக்கிறது என்பது தெரிய வந்தது.

புதுசு

புதுசு

என்னப்பா, படத்தில் யாரும் தெரிந்த முகமே இல்லையே, அப்படி இருந்தும் தேசிய விருதா, அப்படி என்றால் நிச்சயம் விஷயம் இருக்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர்.

தியேட்டர்

தியேட்டர்

காரணம் இல்லாமல் தேசிய விருது அளிக்க மாட்டார்கள். படம் ரிலீஸாகட்டும் அதில் என்ன இருக்கிறது என தியேட்டருக்கு சென்று பார்த்துவிட வேண்டும் என்று பலரும் முடிவு செய்துள்ளனர்.

ரஜினி

ரஜினி

விருது செய்தி அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் பிரம்மாவுக்கு போன் போட்டு பாராட்டியுள்ளார். மேலும் தான் படத்தை விரைவில் பார்க்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குஷி

குஷி

ஒரு பக்கம் தேசிய விருது, மறுபக்கம் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்தால் படக்குழுவினர் குஷியில் உள்ளனர். படம் நிச்சயம் மக்களை சென்றடையும் என்று அவர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.

English summary
National award and Superstar Rajini's wishes have given a new hope to the Kutram Kadithal team.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil