Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறித்தனம் ரெக்கார்டு முறியடிப்பு.. மாஸ் காட்டும் குட்டி ஸ்டோரி.. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

சென்னை: நேற்று மாலை 5 மணிக்கு வெளியான மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல், 16 மணி நேரத்தில் 6 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குட்டி ஸ்டோரி பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார்.
பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல், 16 மணி நேரத்தில் 4 மில்லியன் வியூஸ் கடந்த நிலையில், குட்டி ஸ்டோரி 6 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு ஹீரோயின்... இவருக்கு என்ன கேரக்டரா இருக்கும்?
கீழே இறங்கிய வெய்யோன் சில்லி
நேற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த சூரரைப் போற்று படத்தின் வீடியோ பாடலான வெய்யோன் சில்லியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல். நேற்று முன் தினம் வெளியான சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் இதுவரை 2.3 மில்லியன் மட்டுமே கடந்துள்ள நிலையில், குட்டி கதை 6.2 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.
|
வெறித்தனத்தை மிஞ்சியது
வெய்யோன் சில்லி பாடலை மட்டுமின்றி, பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடிய 'நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்' என்கிற செம பீட் பாடலையும் குட்டி ஸ்டோரி மிஞ்சியுள்ளது. 16 மணி நேரத்தில் வெறித்தனம் பாடல் 4 மில்லியன்களை கடந்த நிலையில், குட்டி ஸ்டோரி பாடல் 6.2 மில்லியனை கடந்து சாதித்துள்ளது.

ஒரு கோடி
24 மணி நேரத்துக்குள் நிச்சயம் ஒரு கோடி வியூஸை குட்டி ஸ்டோரி கண்டிப்பாக கடக்கும் என தளபதி ரசிகர்கள், #KuttiStory ஹாஷ்டேக்கை தொடர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். 5 லட்சத்துக்கும் மேலான ட்விட்டுகள் அந்த ஹாஷ்டேக்கில் இடம்பெற்று இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
|
சிங்கப்பூரில் முதலிடம்
குட்டி ஸ்டோரி பாடல் இந்திய யூடியூபில் மட்டுமின்றி, சிங்கப்பூர் யூடியூப் பக்கத்திலும் முதலிடத்தை பிடித்துள்ளதாக தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கை மற்றும் இங்கிலாந்தில் மூன்றாவது இடத்திலும், கனடா மற்றும் பிரான்சில் 6வது இடத்திலும் குட்டி ஸ்டோரி பாடல் டிரெண்டாகி வருகிறதாம்.
|
குட்டி ஸ்டோரிக்கு காரணம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான லோகி தான் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் குட்டி ஸ்டோரி, இப்படி கார்ட்டூன் அமைப்பில் உருவாக்க மூலக் காரணமாக இருந்துள்ளார். இனிமேல், இவரிடமும் அப்டேட் கேட்டு தொல்லை பண்ணுங்க, செத்தடா லோகி, என அப்டேட் கிங் ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.
|
வரிகளுக்கு வரவேற்பு
நெருப்புடா பாடலை பாடி அசத்திய அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி, பாடலின் வரிகள் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஹார்ட் வொர்க்கும் வேணும், ஸ்மார்ட் வொர்க்கும் வேணும், செல்ஃப் மோடிவேஷன் அது நீதானே என்ற வரிகளை ஷேர் செய்து இந்த ரசிகர் டிரெண்ட் செய்து வருகிறார்.