»   »  ஒரே இரவில் 3 கோலிவுட் பிரபலங்களின் வீட்டில் நடந்த துக்க சம்பவம்

ஒரே இரவில் 3 கோலிவுட் பிரபலங்களின் வீட்டில் நடந்த துக்க சம்பவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திங்கட்கிழமை இரவு மட்டும் கோலிவுட் பிரபலங்கள் மூன்று பேர் தங்களின் உறவுகளை இழந்துள்ளனர்.

கோலிவுட் பிரபலங்களான இயக்குனர் கே.வி. ஆனந்த், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகர் சூரி ஆகியோர் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர். நேற்று இரவு அந்த மூன்று பேரின் வீட்டிலும் மரணம் நிகழ்ந்துள்ளது.

அவர்களுக்கு தமிழ் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூரி

நடிகர் சூரி

நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. அவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில் வசித்து வந்தார்.

கே. வி. ஆனந்த்

கே. வி. ஆனந்த்

இயக்குனர் கே.வி. ஆனந்தின் தந்தை கே. எம். வெங்கடேசன்(74) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.

கவண்

கவண்

விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியனை வைத்து கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள கவண் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்காழி சிவசிதம்பரம்

சீர்காழி சிவசிதம்பரம்

மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மனைவியும், சீர்காழி சிவசிதம்பரத்தின் தாயுமான அவயாம்பாள் சுவாச கோளாறால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.

English summary
Kollywood celebrities Soori, KV Anand and Seerkazhi G Sivachidambaram have each lost a member of their family last night.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil