பெண் இயக்குநருடன் சண்டை போட்டாரா யஷ்?.. டாக்ஸிக் படம் அவ்வளவு தானா?.. தயாரிப்பு நிறுவனம் ஒரே மிதி!

பெங்களூர்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் கன்னட நடிகர் யஷ்ஷுக்கு மிகப்பெரிய பான் இந்தியா வெற்றியை பெற்றுத் தந்தது. அந்த படம் அதிகபட்சமாக 1100 கோடி வசூலை வாரிக் குவித்தது. ஆனால், அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளாக யஷ் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் டாக்ஸிக் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

KVN Productions shuts all the rumours about Yash s Toxic movie release
Photo Credit:

விஜய்யின் ஜன நாயகன் படத்தை தயாரித்து வரும் கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் யஷ் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், டாக்ஸிக் படம் தொடர்பான வதந்திகளுக்கு கேவிஎன் ட்வீட் போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கீதா மோகன்தாஸ் உடன் சண்டை: மாதவன் நடிப்பில் வெளியான நள தமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் கீதா மோகன்தாஸ். அவர் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் பிரம்மாண்டமான படமான டாக்ஸிக் திரைப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்றும் கீதா மோகன்தாஸ் படத்தை கெடுத்துவிட்டார் என்றும் அவருக்கு டைரக்‌ஷனே தெரியல அதனால், யஷ் சண்டை போட்டுவிட்டார் என பொய்யான வதந்திகள் திடீரென சமூக வலைதளங்களில் பரவின.

தயாரிப்பு நிறுவனம் மறுப்பு: பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் தரன் ஆதர்ஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டாக்ஸிக் திரைப்படம் கடைசி கட்ட படப்பிடிப்பில் உள்ளது என பதிவிட்டு இருந்தார். அவரது ட்வீட்டுக்கு ரீட்வீட் போல, கேவிஎன் நிறுவனம் இன்னும் 140 நாட்கள் தான், 2026ம் ஆண்டு மார்ச் 19 அறிவித்ததை போலவே யஷ் நடித்து வரும் டாக்ஸிக் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்பதை உறுதியாக அறிவித்து தேவையற்ற வதந்திகளை பரப்பியவர்களுக்கு ஒரே மிதி கொடுப்பது போல பதிலடி கொடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு கேவிஎன் நிறுவனம் ஜன நாயகன் மற்றும் டாக்ஸிக் என மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை நடத்தப் போவது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X