twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாபம் எஸ் பி ஜனநாதன் திரை வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்!

    |

    சென்னை : பொருளாதார அரசியலை ஏழை எளிய மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் திரைப்படங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தவர் இயக்குனர் எஸ்பி ஜனநாதன்.

    முழுமையாக கமர்ஷியல் படங்களை தவிர்த்து விட்டு மக்கள் சிந்திக்க கூடிய அசாதாரண கதைகளை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை பற்றி பேசும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம்!பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை பற்றி பேசும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம்!

    இந்த நிலையில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள லாபம் திரைப்படம் இவரின் திரைவாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    நியாயமான பொருளாதார அரசியலை

    நியாயமான பொருளாதார அரசியலை

    இந்த மண்ணில் தான் எல்லா தொழிற்சாலைக்கும் தேவையான மூலப் பொருள்களும் கிடைக்கிறது அதை வாங்கி வியாபாரம் பண்ற அத்தனை பெரும் லாபம் பாக்குறாங்க அத விவசாயம் பண்ற விவசாயி மட்டும் நஷ்டத்தை சந்திச்சு தூக்கு மாட்டிகிட்டு சாகுரான் எனவே உங்களின் உழைப்புக்கு நீங்கள்தான் விலையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நியாயமான பொருளாதார அரசியலை லாபம் படத்தின் மூலம் மக்களுக்கு தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர் எஸ் பி ஜனநாதன்.

    உண்மையான லாபம்

    உண்மையான லாபம்

    இதற்கு முன்பு வெளியான இயற்கை, பேராண்மை,புறம்போக்கு என்கிற பொதுவுடமை என ஒவ்வொரு படங்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது அதே போல இப்பொழுது லாபம் திரைப்படமும் முற்றிலும் மாறுபட்டு மக்களுக்கான உண்மையான லாபம் என்ன என்பதை பற்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. காலங்காலமாக கார்ப்பரேட் கம்பெனிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை தருகிறோம் என்ற பெயரில் தொடர்ந்து அவர்களின் உழைப்பை சுரண்டி வருவதை அனைவருக்கும் உரைக்கும்படி வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார்.

    விடாமல் போராடுகிறார்

    விடாமல் போராடுகிறார்

    எப்பொழுதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி இந்த படத்திலும் அதே போல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக மக்களுக்கு எதிராக நடக்கும் உழைப்புச் சுரண்டலை எதிர்த்து ஆரம்பம் முதல் இறுதி வரை விடாமல் போராடுகிறார். விஜய் சேதுபதியின் திரைவாழ்க்கையில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் செய்திருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது.

    மற்றுமொரு மைல்கல்

    மற்றுமொரு மைல்கல்

    கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் பார்ப்பதைவிட மக்கள் கொஞ்சம் சிந்தித்து லாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால் ஒவ்வொரு கார்ப்பரேட் கம்பனிகளும் மக்களின் வசம் என்பதை கூற வந்திருக்கும் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களிலேயே லாபம் மற்றுமொரு மைல்கல்லாக உள்ளது.

    English summary
    Laabam movie is a another milestone for SP Jananathan. Vijay Sethupathi and Shruthi haasan staring in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X