விநாயகர் சதுர்த்தியை லாபம் படத்துடன் கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

Recommended Video

Vijay Sethupathi யை யாரும் கெடுத்துரக்கூடாது | Laabam pressmeet | Filmibeat Tamil

தன்னுடைய படங்கள் வெறும் படங்களாக மட்டும் இருக்கக் கூடாது சமூக அரசியலையும் பேச வேண்டும் என ஒரு படத்திலும் வலியுறுத்தி வரும் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி இப்பொழுது லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

எஸ்பி ஜனநாதன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கும் நிலையில் செப்டம்பர் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியுடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

 இயக்குனர் எஸ் பி ஜனநாதன்

இயக்குனர் எஸ் பி ஜனநாதன்

சினிமாவில் சமூக அரசியல் பேசக்கூடிய வெகு சில இயக்குனர்களில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் மிக முக்கியமானவர். இயற்கை, ஈ ,பேராண்மை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என எஸ்பி ஜனநாதன் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க இப்பொழுது மீண்டும் லாபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி எஸ்பி ஜனநாதன் கூட்டணியில் இரண்டாவது முறையாக இத்திரைப்படம் உருவாகி உள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கார்ப்பரேட் கம்பெனிகள்

கார்ப்பரேட் கம்பெனிகள்

ஒவ்வொரு படங்களிலும் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் எஸ்பி ஜனநாதன் லாபம் படத்திலும் சாதாரண மக்களிடம் காற்றோடு கார்ப்பரேட் கம்பெனிகள் எவ்வாறு உழைப்பை சுரண்டுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி விவசாயியாக நடித்திருக்க பல்வேறு கெட்டப்புகளில் தோன்ற உள்ளார்.

 சொந்த தயாரிப்பில்

சொந்த தயாரிப்பில்

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த லாபம் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியுடன் லாபம்

விநாயகர் சதுர்த்தியுடன் லாபம்

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லாபம் படம் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் சாதாரண நாட்களிலேயே திருவிழாவைப் போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் இப்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாவதால் விநாயகர் சதுர்த்தியுடன் லாபம் படத்தையும் இணைந்து கொண்டாட ரசிகர்கள் தயாராகி உள்ளனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X