Just In
- 6 min ago
எது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு!
- 16 min ago
விட மாட்டேங்குறானே.. நீ எப்படிடா இப்படி வளர்ந்த? ஆரியை பார்த்து பிரமிக்கும் பிரபல இசையமைப்பாளர்!
- 37 min ago
'வருத்தம் தெரிவிக்கிறேன்..' பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்.. விஜய் சேதுபதி விளக்கம்!
- 57 min ago
வாளால் கேக் வெட்டிய விஜய் சேதுபதி.. வைரலாகும் போட்டோ.. சரமாரி கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Lifestyle
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- News
தமிழகத்தில் அரசு மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி!
- Finance
ரெயில்டெல்-ன் சூப்பர் திட்டம்.. செலவே இல்லாமல் கிராமங்களுக்கு பிராண்ட்பேண்ட், வைபை சேவை..!
- Automobiles
2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை
- Sports
கடைசி நிமிடம்.. அந்த கோல்.. கேரளாவுக்கு ஷாக் கொடுத்த ஈஸ்ட் பெங்கால்!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு!
சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் லாபம் படத்தின் ஷூட்டிங்கை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவது படக்குழுவுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி உள்ளது.
அதுவும் இந்த கொரோனா காலத்தில், ஷூட்டிங் பார்க்க ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது என்கிற விதிமுறையை படக்குழுவால் பின் பற்ற முடியவில்லை.
அதன் காரணமாக போலீசாரின் உதவியை லாபம் படக்குழு நாடியுள்ளது.
பொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன் வந்துட்டாங்கள அதான்!

வெளியேறிய ஸ்ருதிஹாசன்
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், ஷூட்டிங் பார்க்க ரசிகர்கள் திரண்டதால், பாதியிலேயே அந்த இடத்தை விட்டு வெளியேறி, கொரோனாவுக்கு கொஞ்சமாவது பயப்படணும், இப்படி பாதுகாப்பு இல்லாத இடத்தில் தன்னால் ஷூட் செய்ய முடியாது என்று பதிவிட்டது பெரிய அளவில் பஞ்சாயத்தை உருவாக்கியது.

ரசிகர்களுடன் செல்பி
நடிகர் விஜய்சேதுபதி, இந்த கொரோனா காலத்திலும் எந்தவொரு சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் தனது ரசிகர்களுடன் சகஜமாக செல்பிக்களை எடுத்துக் கொள்வது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. விஜய்சேதுபதியின் செல்பி போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

போலீஸ் பாதுகாப்பு
தர்மபுரியில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருவதால், ரசிகர்கள் விஜய்சேதுபதியை காண அலைமோதுகின்றனர். அதனால், லாபம் படக்குழுவினரால், பொதுமக்களையும், ரசிகர்களையும் கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளதால், தற்போது போலீசாரின் உதவியை படக்குழு நாடியுள்ளது.

விஜய்சேது போர்ஷன் ஓவர்
இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் காட்சிகள் முற்றிலுமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன என்ற அறிவிப்புடன், படக்குழு மொத்தமாக இருக்கும் மிகப்பெரிய குழு செல்பியும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி கொடுக்கும் போதே, ஏகப்பட்ட விதிகளையும் விதித்து இருந்தது. ஆனால், ஷூட்டிங் நடத்துபவர்கள் அதை சரியாக கடைபிடிப்பதாக தெரியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

எப்போதான் மாஸ்டர் வரும்
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மோதும் காட்சிகளை திரையில் காண ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் பண்ணி வருகின்றனர். தியேட்டரில் தான் படம் ரிலீஸ் என்றாலும், பொங்கலுக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு இன்னமும் ஏன் அறிவிக்க தயங்குகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மலையாள திரைப்படம்
ஏற்கனவே மலையாளத்தில் மார்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, மறுபடியும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 19(1)(a) என வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்த்தில் நித்யா மேனன் ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குநர் இந்து அந்த படத்தை இயக்குகிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்
மேலும், கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் விஜய்சேதுபதி அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நானும் ரவுடி தான் படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.