Don't Miss!
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
அமீர் கானின் “லால் சிங் சத்தா“ டிரைலர் ரிலீஸ்.. குஷியில் ரசிகர்கள் !
குஜராத் : ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது அமீர் கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இறுதிப் போட்டிக்கு முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் நிறைவு விழா நடைபெற்றது. புல்வாமா தாக்குதல், கொரோனா பரவல் என மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதி போட்டி கோலாகலமாக இன்று நடைபெற்றது.

இந்த நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 6:25 மணிக்கு தொடங்கியது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடலுடன் ஐ.பி.எஸ் நிகழ்ச்சி களைகட்டியது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் 2022 இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லால் சிங் சத்தா படத்தின் டிரைலரை அமீர் கான் வெளியிட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் அமீர் கான் இயக்கி உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைத்தன்யா ராணுவ வீரர் கேரக்டரில் நடித்துள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் இப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் நாக சைதன்யா அறிமுகமாகி உள்ளார் . லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.