For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வெறும் 12 தியேட்டரை வச்சுக்கிட்டு என்னத்த படம் பார்க்க.. இது புதுச்சேரி புலம்பல்!

  By Sudha
  |

  புதுச்சேரி: புதுச்சேரி பக்கம் போனால் ஒரு புலம்பலை தவறாமல் கேட்க முடியும். குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போதும், அதை விட முக்கியமாக, புதுப் படங்கள் பெருமளவில் ரிலீஸாகும்போதும், இந்த புலம்பலை தவறாமல் கேட்கலாம் - அது போதிய அளவில் சினிமா தியேட்டர் நம்ம ஊரில் இல்லையே என்பதுதான்.

  உண்மைதான், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெறும் 12 தியேட்டர்கள்தான் இருக்கிறதாம். அதிலும் நகர்ப்புறத்தில் உள்ள தியேட்டர்கள் ஜஸ்ட் 7 மட்டுமே. மற்றவை புறநகர்ப் பகுதிகளில் உள்ளன.

  இந்திய சினிமா நூறாண்டுகளை நிறைவு செய்து கொண்டாட்டத்தில் இருக்கும்போது அந்த சினிமாவைப் பார்த்து ரசிக்க 12 தியேட்டர்களே இருப்பது கடுப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் புதுவை சினிமா ரசிகர்கள்.

  ஒரு காலத்தில் நிறைய இருந்துச்சுங்க

  ஒரு காலத்தில் நிறைய இருந்துச்சுங்க

  ஒரு காலத்தில் அதாவது 85களில் புதுச்சேரியில் 25 தியேட்டர்கள் வரை இருந்தனவாம்.

  கல்யாண மண்டபமாயிருச்சு

  கல்யாண மண்டபமாயிருச்சு

  ஆனால் காலப்போக்கில் படிப்படியாக தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாற ஆரம்பித்தன. சில ஹோட்டல்களாகியன. சில அடுக்குமாடிக் குடியிருப்புகளாகி விட்டன. சில வர்த்தக வளாகங்களாக மாறிப் போய் விட்டன.

  இப்ப இருப்பது 12தான்

  இப்ப இருப்பது 12தான்

  தற்போது புதுச்சேரியில் நகரில் 7 தியேட்டர்களும், புறநகர்ப்பகுதியில் 5 தியேட்டர்களுமாக 12தான் உள்ளன.

  படம் பார்க்க பஸ் ஏறனுமா...

  படம் பார்க்க பஸ் ஏறனுமா...

  இதனால் பெரும்பாலான நேரங்களில் படம் பார்ப்பதற்காக பஸ் ஏறி தமிழகப் பகுதிகளுக்கு பெரும்பாலானவர்கள் வருகிறார்களாம்.

  தியேட்டர்கள் குறைய என்ன காரணம்

  தியேட்டர்கள் குறைய என்ன காரணம்

  தியேட்டர்களுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் வருவது குறைந்ததே தியேட்டர்களை உரிமையாளர்கள் மூட முக்கியக் காரணமாம். திருட்டு டிவிடி புதுச்சேரியில் பெருமளவில் தாராளமாக கிடைக்கிறது. புதுப்படம் ஏதாவது ரிலீஸானால் அதை அன்றைய தினமே புதுவையில் வாங்கி விடலாம்.. சும்மா இல்லை, பக்கா காப்பியாக, பளிச்சென்று இருக்கும்.

  வரி விதிப்பு அதிகம்

  வரி விதிப்பு அதிகம்

  அதேபோல பொழுதுபோக்கு வரி அதிக அளவில் இருப்பதால் டிக்கெட் கட்டணத்தையும் அதிகம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதனால் தியேட்டர்களில் அதிக கட்டணம் கொடுத்துப் படம் பார்க்க மக்கள் முன்வருவதில்லை. மாறாக திருட்டு டிவிடி மிக மிக மலிவான விலையில் அதை வாங்கிப் படம் பார்த்து விட்டுப் போய் விடுகின்றனர் என்று கூறுகிறது புதுச்சேரி சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்.

  இந்த தீபாவளி பரவாயில்லை

  இந்த தீபாவளி பரவாயில்லை

  இருப்பினும் இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜீத் நடித்த ஆரம்பம், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷால் நடித்த பாண்டியநாடு ஆகியவை புதுவையிலும் ரிலீஸாகின. இதனால் ரசிகர்களுக்கு சற்றே கொண்டாட்டம்தான்.

  ஆனால் கிருஷ் 3 வரலையே ராசா....

  ஆனால் கிருஷ் 3 வரலையே ராசா....

  ஆனால் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த கிருஷ் 3 போன்ற படங்கள் தங்களது மாநிலத்தில் ரிலீஸாகவில்லையே என்று இந்திப் பட ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

  தமிழ் டப்பிங் வரும்.. டோன்ட் ஒர்ரி

  தமிழ் டப்பிங் வரும்.. டோன்ட் ஒர்ரி

  ஆனால் கிருஷ் 3 படத்தின் தமிழ் டப்பிங் விரைவில் ரிலீஸாகும் என்று புது்ச்சேரி திரைப்பட விநியோகஸ்தர்கள் நம்பிக்கையூட்டுகின்றனர்.

  புதுப்படம்னா தமிழ்நாடுதான்

  புதுப்படம்னா தமிழ்நாடுதான்

  இப்ப நிலைமை பரவாயில்லை. முன்பெல்லாம் தமிழ்நாட்டில் வெளியாகும் புதுப் படங்களில் பாதி கூட புதுச்சேரி பக்கம் வராத நிலை இருந்ததாம். இப்போதுதான் புதுப்படங்கள் தமிழகத்தில் ரிலீஸாகும் அதே நாளில் புதுவைக்கும் விசிட் அடிக்கின்றனவாம்.

  ஒவ்வொரு மக்களுக்கும் எவ்வளவு கஷ்டம் பாருங்க...

  English summary
  Even as the Indian feature film industry is growing from strength to strength completing more than 100 years of its existence the lack of adequate number of cinema halls with good infrastructure in the Union territory of Puducherry is dampening the spirit of moviegoers. There were about 25 halls in the territory until 1985 and more than half of them were shut down and later converted into wedding halls, hotels, apartments and commercial complexes. Currently, there are just 12 cinema halls — seven in the town and five in suburbs.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more