Kantara Chapter 1: காந்தாரா சாப்டர் 1 பார்த்த பெண்ணுக்கு சாமி வந்துடுச்சு.. என்ன ஆட்டம்.. வீடியோவ பாருங்க!

சென்னை: ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் முதல் நாளிலேயே பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றது. படத்தின் முதல் பாகம் ஏற்கனவே பிரமாண்ட வெற்றியை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகமும் பெரும் வெற்றியை நோக்கி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் படம் தியேட்டரில் ஓடிக் கொண்டு இருக்கும்போதே, படம் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகை ஒருவர், சாமி வந்து ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, "இதுவரை இந்தியாவில் இப்படியொரு படத்தைப் பார்த்ததில்லை; ரிஷப் ஷெட்டி ஒரு நடிகர் மற்றும் இயக்குநராக உலகிற்கே தன்னை நிரூபித்துள்ளார்," என்று பாராட்டி உள்ளார். அதேபோல் நடிகர் யாஷ் தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார். ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தென்னிந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பாராட்டுகளை குவித்து வரும் இத்திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக கன்னட சினிமாவில் ஒரு மைல் கல் எனலாம்.

Lady Gone Devotional Stage At Theatre When She Watching Kantara Chapter 1 - Video
Photo Credit:

பாராட்டு: படத்தின் உருவாக்கத்திற்கு ரிஷப் ஷெட்டி முக்கியத்துவம் அளித்துள்ளதை ஒவ்வொரு காட்சியிலும் காணமுடிகிறது என பல ரசிகர்கள் இணையத்தில் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. . ரூபாய் 125 கோடி பட்ஜெட்டில் இத்தகைய ஹாலிவுட் தரமான சிஜி பணிகளை வழங்க முடிந்தால், ரூபாய் 300 கோடிகளில் இருந்து ரூபாய் 500 கோடிகள் பட்ஜெட் படங்களில் இந்திய இயக்குநர்கள் என்ன மாதிரியான படங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த படம் ஒரு கிளாஸ் எடுத்துள்ளது என்றும் பேசி வருகிறார்கள்.

சாமி ஆடிய பெண்: காந்தாரா சாப்டர் 1 படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 80 கோடிகள் முதல் ரூபாய் 100 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, இணையத்தில் தற்போது வேகமாக ஒரு வீடியோ பரவி வருகிறது. அதாவது, தியேட்டர் ஒன்றில் படம் ஓடிக் கொண்டு இருக்கும்போதே பெண் ஒருவர் திரையரங்கிற்குள்ளே சாமி வந்து ஆடுகிறார். இதனால் அவருக்கு அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்த மற்ற ரசிகர்கள் எல்லாம் ஓரமாக போய் நின்று கொண்டார்கள். மேலும், அவருடன் வந்த ஆண்கள், அந்த பெண்ணைப் பிடித்து, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை ஆசுவாசப்படுத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Lady Gone Devotional Stage At Theatre When She Watching Kantara Chapter 1 - Video
Photo Credit:

கமெண்ட்: இதைப் பார்த்த இணையவாசிகள், காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இப்படி இருக்கும்போது, படம் பார்த்துக் கொண்டு இருந்த பெண் ரசிகை ஒருவர் சாமி வந்து ஆடுகிறார் என்ற தகவல் பெண்கள் மத்தியில் பரவினால், பெண்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக திரண்டுவிடுவார்கள் என பேசி வருகிறார்கள். படம் தீபாவளி வரை ஓடினால் கட்டாயம் ரூபாய் 1000 கோடிகள் வரை வசூலாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் படத்தை 3டியில் எடுத்து இருக்கலாம் இன்னும் நெருக்கமாக கொண்டு போயிருக்கும் என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X