“கனெக்ட்“ வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி…அறிக்கை வெளியிட்டு நெகிழ்ந்த நயன்தாரா!

சென்னை : கனெக்ட் திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா இதயப்பூர்வமான நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கிய திரைப்படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

99 நிமிடங்கள் ஓடக்கூடிய திகில் திரில்லிங் நிறைந்த திரைப்படமாக இந்த படத்தை, ரௌடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.

கனெக்ட் படத்தின் கதை

கனெக்ட் படத்தின் கதை

மருத்துவரான வினய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார். இதையடுத்து, அவரின் மனைவி நயன்தாரா மற்றும் மகளும் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கின்றனர். அப்போது இறந்த தன்னுடைய தந்தையிடம் பேச மகள் ஆசைப்பட்டு விபரீதமான ஒரு செயலை செய்கிறார். ஆனால், கடைசியில் அவர் ஒரு தீய சக்தி பேயிடம் மாட்டிகொள்கிறாள். இதையடுத்து, பேயிடம் மாட்டிக்கொள்ளும் தன்னுடைய மகளை நயன்தாரா மீட்டாரா என்பதே கனெக்ட் படத்தின் சுவாரசியமான கதை.

நயன்தாரா அறிக்கை

நயன்தாரா அறிக்கை

இந்நிலையில், நடிகை நயன்தாரா கனெக்ட் திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு இந்த ஆண்டு ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகும். ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். எங்களின் கனெக்ட் படத்தை பார்த்து ஆதரவளித்த அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

பெருமை அடைகிறேன்

பெருமை அடைகிறேன்

மேலும்,கனெக்ட் திரைப்படத்தில் பார்வையாளர்களை மனதில் வைத்து, ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் பணியாற்றினோம். என்னை நம்பி என்னுடன் இருந்ததற்காக எனது இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. உங்களின் இயக்கத்தில் நான் நடித்ததில் பெருமை அடைகிறேன் உங்களின் இயக்கம் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.

நிபந்தனையற்ற நன்றி

நிபந்தனையற்ற நன்றி

கனெக்டபடத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கும், ரவுடி பிக்சர்சுக்கும் அன்பு கலந்த நன்றி. உங்கள் அன்பு, ஆதரவு, கருத்து, விமர்சனங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இனி வரும் காலங்களில் எங்களின் புதிய முயற்சிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நம்புகிறோம். ரசிகர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை உங்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் தடம் பதிக்கும் நயன்

பாலிவுட்டில் தடம் பதிக்கும் நயன்

நடிகை நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், எதிர் நீச்சல் மற்றும் கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் ஒரு படத்திலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் தனது தடத்தை பதிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X