»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
நடிகை லைலாவின் படப்பிடிப்புக்குள் திடீரென லாரி புகுந்தது. இதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

அர்ஜூனின் ஜெய்சூர்யாவுக்குப் பிறகு கன்னக்குழி நடிகை லைலா நடித்து வரும் படம் "கண்ட நாள் முதல். இந்தப் படத்தில் அவர்பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இதன் படப்பிடிப்பு, தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.நேற்று சென்னை அருகே உள்ள இரும்புலியூர் நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

லைலா, பிரசன்னா சம்பந்தப்பட்ட காதல் காட்சி படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தது.இருவரும் கைகோர்த்தபடி சாலை ஓரத்தில்பேசிக்கொண்டு வருவது போல படமாக்கினார்கள்.

அப்போது நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி, திடீரென பயங்கர வேகத்துடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தஇடத்திற்குள் புகுந்தது.

இதனால் லைலா, பிரசன்னா மற்றும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவரும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். லாரி வேகமாக வருவதைப் பார்த்ததும் அனைவரும் அங்கிருந்து ஓடியதால் அனைவரும் உயிர் பிழைத்தனர்.

படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்த லாரி, தாறுமாறாக சிறிது தூரம் ஓடி ஒரு சுவற்றில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில்லைலா,கதாநாயகன் பிரசன்னா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருமே மயிரிழையில் உயிர் தப்பினர்.

உடனடியாக லாரி டிரைவரை படப்பிடிப்புக் குழுவினர் விரட்டிச் சென்று பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். போலீஸார்அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த லைலா, உடனடியாக படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.இதனால் படப்பிடிப்பும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

யாருக்குத் தான் உயிர் மேல் ஆசை இருக்காது..!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil