»   »  வெண்ணிலா கபடிக்குழு பார்ட் 2: கபடியாடப்போகும் லஷ்மண்

வெண்ணிலா கபடிக்குழு பார்ட் 2: கபடியாடப்போகும் லஷ்மண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுசீந்திரன் இயக்கத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. ஜீவா படத்தில் இரண்டாவது நாயகனாக லஷ்மண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஜீவா' படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், தனது முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை, திரைக்கதை எழுதி முடித்திருக்கிறார் சுசீந்திரன்.

பரோட்டா காமெடி

பரோட்டா காமெடி

'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம் மக்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. காமெடி நாயகன் சூரியின் பரோட்டா காமெடி பிரபலமானது.

வெண்ணிலா கபடிக்குழு

வெண்ணிலா கபடிக்குழு

விஷ்ணு, சரண்யா மோகன் நடித்த வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு இன்றைக்கும் ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிருந்தார் சுசீந்திரன்.

உதவியாளருக்கு வாய்ப்பு

உதவியாளருக்கு வாய்ப்பு

ஆனால் தற்போது விஷால் படத்தை இயக்கி வருவதால், 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் இரண்டாம் பாகத்தை அவருடைய இணை இயக்குநர் சேகர் இயக்கவிருக்கிறார்.

நாயகனாக லஷ்மண்

நாயகனாக லஷ்மண்

'ஜீவா' படத்தின் இரண்டாம் நாயகனாக நடித்த லஷ்மண் நாயகனாக நடிக்கவிருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

English summary
Actor Lakshman Narayan was last seen as the second hero in Jeeva, a sports flick. Now, he’s all set to play the protagonist in the upcoming sequel to Vennila Kabadi Kuzhu.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil