»   »  'கேமராவை வச்சதும் மழை வந்துருச்சி...!' - ரோமியோ - ஜூலியட்டுக்கு கிடைத்த வரம்

'கேமராவை வச்சதும் மழை வந்துருச்சி...!' - ரோமியோ - ஜூலியட்டுக்கு கிடைத்த வரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயம் ரவி நடித்த படங்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஏனோ அவரை திரையில் பார்த்து ரொம்ப நாட்களாகிவிட்ட மாதிரி உணர்வு. அதைப் போக்கும் விதமாக வரவிருக்கிறது ரோமியோ ஜூலியட்.

ஹன்சிகா - பூனம் பாஜ்வா

ஹன்சிகா - பூனம் பாஜ்வா

ஹன்சிகா இந்தப் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார்.


மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்.பாடல் காட்சி

பாடல் காட்சி

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன். படம் பற்றி இயக்குனர் லஷ்மனிடம் கேட்டோம்...


சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது தாமரை எழுதிய பாடலான "தூவானம் தூவத் தூவ..


மழைத்துளியில் உன்னை கண்டேன்..." என்ற பாடலை படமாக்க நாங்கள் ஆயத்தமானோம்.இயற்கை மழை

இயற்கை மழை

ஆனால் மழை எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை சாதாரணமாகத்தான் எடுக்க நினைத்தோம். ஆனால் கேமராவை வைத்தவுடன் பாடல் வரிகளுக்கு ஏற்ப இயற்கையே மழையை வரவழைத்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.


டன்டனக்கா...

டன்டனக்கா...

இப்ப தமிழகமெங்கும் 'டன்டனக்கா...' பாடல் செம்ம ஹிட்டாகி இருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது," என்றார் இயக்குனர்.


English summary
Jayam Ravi - Hansika starrer Romeo Juliet movie director Lakshman has shared his shooting experience of the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil