»   »  பள்ளிக்கூடம் போறப்பவே ஜெயம் ரவியோட தீவிர ரசிகை நான் - லட்சுமி மேனன்

பள்ளிக்கூடம் போறப்பவே ஜெயம் ரவியோட தீவிர ரசிகை நான் - லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கூடம் போய் படிச்ச காலத்திலேயே ஜெயம் ரவி தன்னை ரொம்ப ஈர்த்து விட்டதா நடிகை லட்சுமி மேனன் சொல்லி இருக்காங்க.

ஜெயம் ரவி- லட்சுமி மேனன் முதன்முறை ஜோடி போட்டு நடித்திருக்கும் படம் மிருதன். தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற பெருமையோட இந்தப்படம் வர்ற பிப்ரவரி 12ம் தேதி வெளியாகுது.


இந்த நேரத்துல ஜெயம் ரவி, மிருதன் அப்புறம் தலயோட வேதாளம் படத்துல தங்கச்சியா நடிச்சதுன்னு நிறைய விஷயங்களைப் பத்தி லட்சுமி மேனன் பேட்டி கொடுத்து இருக்காங்க.


லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

சசிகுமார் ஹீரோவா நடிச்ச சுந்தரபாண்டியன் படம் தான் நடிகை லட்சுமி மேனனை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இவர் நடிச்சு வெளியான கும்கி, பாண்டியநாடு,ஜிகர்தண்டா, கொம்பன், மஞ்சப்பை, வேதாளம்னு எல்லாப் படமுமே ஹிட் வரிசையில இடம்பெற இன்னைக்கு தமிழ் சினிமாவுல லட்சுமி மேனனும் ஒரு முன்னணி நடிகைகிங்கற அந்தஸ்தை எட்டிப் பிடிச்சிருக்காங்க.
மிருதன்

மிருதன்

வர்ற காதலர் தினத்தை முன்னிட்டு ஜெயம் ரவி - லட்சுமி மேனன் ரெண்டு பேரும் ஜோடி போட்டு நடிச்சிருக்கற மிருதன் திரைப்படம் 12 ம் தேதி வெளியாகுது. ஜெயம் ரவியோட உயரத்துக்கு லட்சுமி மேனனும் சளைச்சவர் இல்லைங்கிறதால பாடல் காட்சிகள்ல ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் சும்மா அள்ளுதுன்னு பார்த்தவங்க சொல்றாங்க.


பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

சமீபத்துல லட்சுமி மேனன் ஒரு பேட்டி கொடுத்து தனக்கு ஜெயம் ரவியை ஸ்கூல் படிக்கும்போதே ரொம்பப் பிடிக்கும்னு சொல்லி இருக்காங்க. வேற என்னவெல்லாம் அவங்க சொன்னாங்கன்னு பாக்கலாம். " நான் ஸ்கூல் படிக்கும் போது ஜெயம் ரவியோட 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'படம் பார்த்தேன். அதில இருந்தே எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். இப்போ மிருதன் படத்துல ஜெயம் ரவி கூட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதும் சந்தோஷமா இருந்தது.


ஆக்ஷன் காட்சிகள்

ஆக்ஷன் காட்சிகள்

மிருதன் படத்துல நான் டாக்டரா நடிச்சிருக்கேன். அதோட சில ஆக்ஷன் காட்சிகளும் செஞ்சிருக்கேன் இதுக்கு ஜெயம் ரவி எனக்கு உறுதுணையா இருந்து சொல்லிக் கொடுத்தார்.


வேதாளம் மாதிரி

வேதாளம் மாதிரி

வேதாளம் படத்துல நான் அஜித்தோட தங்கையா நடிச்சதுக்கு காரணம் படத்துல என்னோட பங்கு அதிகமா இருந்தது தான். அஜித் சாருக்காக நடிக்கலை. படத்தோட இயக்குநர் சிறுத்தை சிவா என்னோட கதாபாத்திரத்தை நல்லா அமைச்சிருந்தாரு. இனிமே எந்தப் படத்துலயும் தங்கச்சியா நடிக்க மாட்டேன்" அப்படின்னு உறுதியா சொல்லி இருக்காங்க.


சிக்கலில் மிருதன்

சிக்கலில் மிருதன்

வர்ற வாரம் வெளியாகிற மிருதன் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்காங்க. இதனால் எப்படியாவது யூ சான்றிதழ் வாங்கியே தீரணும்னு ரிவைசிங் கமிட்டிக்கு போக படக்குழு முடிவு செஞ்சிருக்காம்.
English summary
"I saw Jayam Ravi's M Kumaran S/O Mahalakshmi in school Days. Since then, the attraction for me was Ravi" Lakshmi Menon says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil