Don't Miss!
- News
அவ்வளவு நம்பிக்கையா போனாரே! சுழலில் சிக்கிய ஓபிஎஸ்! பாஜக தந்த ட்விஸ்ட்! ஊசலாடும் அரசியல் எதிர்காலம்?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ஷாக்கிங்.. அன்பே சிவம், புதுப்பேட்டை பட தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கே. முரளிதரன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை தனது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தவர் முரளிதரன்.
அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பாபா ரீ-ரிலீஸ்..ரஜினி முடிவெடுத்தது எதனால்?..2-கே கிட்ஸை குறி வைக்கும் படமா? ..வெற்றி கிடைக்குமா?

தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் எனும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கே. முரளிதரன் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனது வீட்டில் உயரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே. முரளிதரனின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
90களில் தொடங்கப்பட்ட லக்ஷ்மி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளரான கே. முரளிதரன் ஏகப்பட்ட ஹிட் படங்களை தயாரித்துள்ளார். சரத்குமாரின் அரண்மனை காவலன் படத்தில் தொடங்கி பல படங்களை தயாரித்த இந்த நிறுவனத்துக்கு கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தன. சில ஆண்டுகளாக புதிய படங்களை தயாரிக்காமல் இருந்து வந்தார் கே. முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பே சிவம்
அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி, சிலம்பாட்டம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல பெரிய படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட இயக்குநர்களையும், நடிகர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை கே. முரளிதரனுக்கு உண்டு. இந்நிலையில், அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னையில் இறுதிச்சடங்கு
கும்பகோணத்தில் கே. முரளிதரன் இன்று காலமான நிலையில், அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், நாளை அல்லது நாளை மறுதினம் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த கே. முரளிதரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சித்ரா லட்சுமணன் இரங்கல்
சித்ரா லட்சுமணன் இந்த தகவல தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, எனது நண்பன் மறைந்து விட்டார். இப்படியொரு பதிவை போடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என வேதனையடைந்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.