»   »  லட்சுமி ராமகிருஷ்ணனை பற்றி ஸ்ரீப்ரியாவிடம் போட்டுக் கொடுத்த ரசிகர்

லட்சுமி ராமகிருஷ்ணனை பற்றி ஸ்ரீப்ரியாவிடம் போட்டுக் கொடுத்த ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப பிரச்சனைகளை தீர்க்க நடிகைகள் யார் என கேட்ட தன்னை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டதாக ஒருவர் நடிகை ஸ்ரீப்ரியாவிடம் தெரிவித்துள்ளார்.

குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகளை நடிகைகள் டிவி சேனல்களில் நடத்தி வருகிறார்கள். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு, கீதா, ஊர்வசி ஆகியோர் இது போன்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

Lakshmi Ramakrishnan blocked me for this: Tweets a fan

இந்த நிகழ்ச்சிகளில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருவதை ரசிகர்கள் பார்தது வருகிறார்கள். நடிகைகள் பிறரின் குடும்ப பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு கூறும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கவே கடுப்பாக உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க குடும்ப நல நீதிமன்றம் உள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரமேஷ் என்பவர் ஸ்ரீப்ரியாவிடம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

@sripriya கடந்த சில நாட்களுக்கு முன்பு இது போன்ற அர்த்தத்துடன் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ட்வீட் போட்டேன். ஆனால் அவர் என்னை பிளாக்(block) செய்துவிட்டார் என்றார்.

English summary
A fan tweeted to actress Sripriya saying that actress Lakshmi Ramakrishnan blocked him for asking about her TV programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil