»   »  சோஷியல் மீடியாவே வேண்டாம் சாமி: பெரிய கும்பிடு போட்டு கிளம்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

சோஷியல் மீடியாவே வேண்டாம் சாமி: பெரிய கும்பிடு போட்டு கிளம்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்தார். அதை பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்தனர்.

Lakshmi Ramakrishnan comes out of social media

தன்னை கலாய்த்த பாலாஜியை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் விளாசித் தள்ளினார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் லட்சுமிக்கு ஆதரவாக ட்வீட் போட்டனர். விடுங்க மேடம் நீங்க ஒரு படைப்பாளி இதை எல்லாம் போய் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார்கள்.

ஒரு சில ரசிகர்கள் லட்சுமிக்கு எதிராக ட்வீட் போட்டனர். இந்நிலையில் லட்சுமி இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுகிறேன்...என் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் என்னை காயப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களுக்கு வாழ்த்துக்கள். குட் லக் மற்றும் பை என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actress Lakshmi Ramakrishnan tweeted that, 'Coming out of all social media NOW...Thanks to all my supporters & Best wishes to those who hurt me & insulted me:) Good luck & Bye'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil