»   »  தானாக வந்து சிக்கிய ஜி.வி.: ட்விட்டரிலேயே 'அபாயின்மென்ட்' பிக்ஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்

தானாக வந்து சிக்கிய ஜி.வி.: ட்விட்டரிலேயே 'அபாயின்மென்ட்' பிக்ஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமாரை சந்தித்து படம் பற்றி பேச நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அபாயின்மென்ட் வாங்கியுள்ளார்.

தனது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்ப்பது இருக்கட்டும் அர்த்தமுள்ள கதாபாத்திரம் கொடுத்தால் நடிக்க ரெடியா என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் நடிகர் ஜி.வி. பிரகாஷிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிக்க தயார் என்று ஜி.வி.யும் தில்லாக ட்வீட் போட்டார். அதை பார்த்த லட்சுமி பதிலுக்கு ட்வீட்டினார். இரண்டு பேரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.

எங்கே?

கதை நன்றாக இருந்தால் நடிப்பேன் என கூறிய ஜி.வி.யின் ட்வீட்டுக்கு லட்சுமி போட்ட பதில் ட்வீட்: கதையை சொல்கிறேன். எப்பொழுது மற்றும் எங்கே?

அபாயின்மென்ட்

@LakshmyRamki ஜகதீஷ் மூலம் அபாயின்மென்ட் ஃபிக்ஸ் செய்கிறேன். அவர் உங்களை நாளை தொடர்பு கொள்வார். புதன் அல்லது வியாழக்கிழமை சந்திக்கலாம் மேடம் என தெரிவித்துள்ளார் ஜி.வி.

லட்சுமி

புதன் அல்லது வியாழக்கிழமை சந்திக்கலாம் என்று ஜி.வி. கூறியவுடன் நான் 25ம் தேதி வரை ஊரில் இல்லை. 27ம் தேதி சந்திக்கலாமா என லட்சுமி கேட்டார்.

ஓகே

27ம் தேதி சந்திக்கலாமா என லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டதற்கு சரி என பதில் அளித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

English summary
Lakshmi Ramakrishnan has fixed appointment with GV Prakash Kumar to narrate script to him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil