»   »  லட்சுமி ராமகிருஷ்ணனை கவர்ந்த அம்மிணி

லட்சுமி ராமகிருஷ்ணனை கவர்ந்த அம்மிணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படத்தை இயக்க தயராகிவிட்டார். மூன்றாவது படத்திற்கு அம்மிணி என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஸ் என்கிற பாஸ்கரன், நாடோடிகள், ரௌத்திரம் உள்ளிட்ட படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இயக்குநராக லட்சுமி ராமகிருஷ்ணன்

இயக்குநராக லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிப்போடு திருப்தி படாத லட்சுமி ராமகிருஷ்ணன்‘ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இரண்டாவது படம்

இரண்டாவது படம்

இதன் மூலம் முதல் வெற்றியை ருசித்த அவர் ‘நெருங்கி வா முத்தமிடாதே' என்ற படத்தையும் இயக்கினார்.

ரசிகர்களின் வரவேற்பு

ரசிகர்களின் வரவேற்பு

இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

அம்மிணி

அம்மிணி

இவர் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘அம்மிணி' என்று பெயரிட்டுள்ளார். 79 வயதான தெருவில் காகிதம் சேகரிக்கும் ஒரு மூதாட்டியின் கதையாம்.

உண்மை கதை

உண்மை கதை

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

பெண்ணின் துயரம்

பெண்ணின் துயரம்

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, என்னுடைய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்துகொண்டு, அவளது துயரங்களை என்னிடம் கூறினார்.

ஈர்த்த கதை

ஈர்த்த கதை

அந்த பெண்ணின் கதை என்னை மிகவும் ஈர்த்தது. அதை ஒரு படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். அந்த கதையை அடிப்படையாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறேன் என்கிறார். விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாக உள்ளது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

English summary
Actor-filmmaker Lakshmy Ramakrishnan's upcoming Tamil directorial “Ammini” will be based on the inspiring yet funny attitude towards life of a 79-year-old woman.
Please Wait while comments are loading...