»   »  நீங்க நல்லவரா.. இல்ல கெட்டவரா... என்னம்மா இது.. லட்சுமி ராமகிருஷ்ணனை இப்படிப் படுத்துறீங்களேம்மா!

நீங்க நல்லவரா.. இல்ல கெட்டவரா... என்னம்மா இது.. லட்சுமி ராமகிருஷ்ணனை இப்படிப் படுத்துறீங்களேம்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது வசனத்தை சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது திமுகவினர் பயன்படுத்துவதற்கு எந்தவித கேள்விகளையும் எழுப்பாமல் இருக்கிறார்.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக மட்டும் கோபப்பட்ட நீங்கள் தற்போது ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள்? என்று அவரது ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களின் புண்ணியத்தால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கும் அந்த வசனம் உருவான விதம் மற்றும் கடந்து வந்த சச்சரவுகளைப் பற்றி இங்கே காணலாம்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஜீ தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தான் அவரை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் இவர் கூறும் 'என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா' என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது.

விஜய் டிவி

இவரின் இந்த வசனத்தை விஜய் டிவி தனது 'அது இது எது' நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தி அம்மணியை வெறுப்பேற்றியது. மேலும் ஆண் வேடமிட்ட ஒருவர் இந்த வசனத்தை அடிக்கடி பயன்படுத்தியதை வைத்து விஜய் டிவி விளம்பரம் செய்ய கடுப்பான லட்சுமி உங்களை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார்.

கமிஷனரிடம் புகார்

கமிஷனரிடம் புகார்

மேலும் சென்னை கமிஷனர் அலுவலகம் சென்று கமிஷனர் ஜார்ஜிடம் விஜய் டிவி நிகழ்ச்சிகள் தனது மனதைப் புண்படுத்துகிறது என்றும் புகார் அளித்திருந்தார். அவரின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது.

சிவகார்த்திகேயன்

மேலும் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனும் தனது பங்கிற்கு அந்த வசனத்தை பாடலில் பயன்படுத்தி லட்சுமி ராமகிருஷ்ணனின் பிபியை ஏற்றினார். அந்தப் பாடல் குறித்த விளக்கத்தில் விஜய் டிவியின் கலாய்ப்பு நிகழ்ச்சியில் இருந்து அந்த வரிகளை எடுத்ததாக கூறியிருந்தார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் 'என்னம்மா' பாடலுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா?. கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன், இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கிறது" என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

நேற்றுமுதல்

நேற்றுமுதல்

இந்நிலையில் நேற்று முதல் திமுகவினர் தங்களின் பிரச்சாரத்திற்கு இந்த வசனத்தை பயன்படுத்தி வருகின்றனர். 5 ஆண்டுகால ஆட்சியில் முதல்வரை நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்று ஆரம்பிக்கும் அந்த விளம்பரத்தின் இறுதியில் 'என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா' என்று முடிகின்றது.நேற்றுமுதல் இந்த விளம்பரம் தினசரிகளின் முழுப்பக்கம் தொடங்கி டிவி, சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன், விஜய் டிவி

சிவகார்த்திகேயன், விஜய் டிவி

திமுகவினரின் இந்த பிரசாரத்திற்கு இதுவரை லட்சுமி ராமகிருஷ்ணன் தரப்பிலிருந்து பதில் எதுவுமில்லை. இதனால் சிவகார்த்திகேயன், விஜய் டிவியை கண்டித்த லட்சுமி இதற்கு மட்டும் அமைதியாக இருப்பது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீங்க நல்லவங்கனா

"நீங்க நல்லவங்கனா எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே ரியாக்ட் செய்யணும் அப்போ ஒண்ணு இப்போ ஒண்ணா? என்று சீனு என்பவர் கேட்டிருந்தார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் "தம்பி அந்த விளம்பரம் என்னைக் குறிவைக்கவில்லை. சரியான ஆட்களிடம் இருந்து அதற்கான பதில் வரும் புரிஞ்சுக்கோங்க" என்று கூறியிருக்கிறார்.

நான் அம்மாவிற்கு

இதனால் நீங்கள் அம்மாவிற்கு எதிரானவரா? என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு "நான் எதுவும் கூறவில்லை. மேலும் நான் அம்மாவிற்கு எதிரானவர் அல்ல. ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தில் அவரின் வளர்ச்சியைப் பார்த்து நான் பெருமை கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆனாலும் சமூக வலைதளங்களில் பலரும் இதே கேள்வியை எழுப்பி லட்சுமி ராமகிருஷ்ணனை கடுப்பேற்றி வருகின்றனர்.

English summary
Lakshmi Ramakrishnan's 'Ennama Ippadi Panreengale Ma' Dialogue used DMK Party for Election Advertisement. Now fans Raised many Questions against Lakshmi Ramakrishnan in Social Networks

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil