»   »  விருதுக்குக் குறி வைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனின் 'அம்மணி'!

விருதுக்குக் குறி வைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனின் 'அம்மணி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கெனவே ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களை எடுத்தவர். இந்த இரண்டு படங்களில் ஆரோகணம் பாராட்டுகளைப் பெற்றது. அடுத்த படம் தோல்வி.

ஆனாலும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்றாவது படம் எடுக்க புரொடியூசர் கிடைத்துவிட்டார். அம்மணி உருவாகி இன்று ரிலீசும் ஆகிவிட்டது.

Lakshmi Ramakrishnan's Ammani from today

இந்தப் படத்தின் மருத்துவமனையில் கடை நிலை ஊழியராக வேலைப் பார்க்கும் ஒரு பெண்மணியை அவரது மகன்கள் கடைசி காலத்தில் எப்படி உதாசீனப்படுத்துகிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட விசுவின் வரவு நல்ல உறவு படம் மாதிரிதான்.

படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பிரதானமாக எதுவும் இல்லை. ஆனால் முந்தைய இரு படங்களை விட நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Lakshmi Ramakrishnan's Ammani from today

தமிழகம் முழுவதும் பரவலாக வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தவிர, நித்தின் சத்யா மட்டும்தான் தெரிந்த முகம். மற்றவர்கள் புதுசு.

இந்தப் படம் வசூலில் எப்படியோ... திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளுக்குச் செல்லும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில்.

English summary
Lakshmi Ramakrishnan's 3rd directorial movie Ammani is releasing today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil