»   »  ஹௌஸ் ஓனர்.... லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நான்காவது படம்!

ஹௌஸ் ஓனர்.... லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நான்காவது படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஹௌஸ் ஓனர் என சுத்தமான ஆங்கிலப் பெயரைச் சூட்டியுள்ளார். வரிவிலக்கு பஞ்சாயத்து இனி இல்லை என்பதால் இப்படி ஆங்கிலத்துக்கு மாறிவிட்டார் போலிருக்கிறது.

Lakshmi Ramakrishnan's House Owner

இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர்.

"ஹௌஸ் ஓனர்' ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும். நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம்தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் அந்தப் படத்தை அவளது திருமணத்துக்குப் பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப்படம் பார்க்க நேரிட்டது. அந்தப் படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்துக் கேட்டேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை.

ஆனால் அந்த இந்திப் படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான , அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்லப் போகிறேன். ஒளிப்பதிவாளர் ஜோனான் டி ஜான் ஒளிப்பதிவு செய்ய, அசோக் செல்வன் ஐஸ்வர்யா ராஜேஷ் என்கிற திறமையான கலைஞர்கள் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்," என்றார்.

English summary
Lakshmi Ramakrishnan has announced his fourth movie House Owner, starring Ashok Selvan and Aishwarya Rajesh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil