»   »  லட்சுமி ராமகிருஷ்ணனின் அம்மிணியும்… சுப்புலட்சுமி பாட்டியும்…

லட்சுமி ராமகிருஷ்ணனின் அம்மிணியும்… சுப்புலட்சுமி பாட்டியும்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுநாள்வரை இயக்கம் மட்டுமே என்றிருந்த நான் என்னுடைய மூன்றாவது படத்தில் இயக்கி நடிப்பது பெரிய சவாலான விசயம் என்று கூறியுள்ளார் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த சவால்களை சமாளிப்பதும் மகிழ்ச்சியான விஷயம்தானே என்றும் அவர் கூறியுள்ளார்.

அரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களை தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'அம்மிணி' என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தை டக் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் வேன் கோவிந்த் தயாரிக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்டு செய்த படங்களில், அவர் நடித்ததே இல்லை. இந்த படத்தை முதல்முறையாக டைரக்டு செய்து நடிக்கிறார்.

உண்மை சம்பவங்கள்

உண்மை சம்பவங்கள்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் அனுபவத்தில் கிடைத்த சில உண்மை சம்பவங்களை படமாக எடுக்க உள்ளாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அம்மிணி

அம்மிணி

படத்துக்கு அம்மிணி என்று தலைப்பு வைத்திருக்கிறார். சமூகம் சார்ந்த கதை, குறிப்பாக பெண்களுக்கு பக்க பலமாக இந்த படம் இருக்கும் என்கின்றனர்.

சவாலான கதாபாத்திரம்

சவாலான கதாபாத்திரம்

இந்த புதிய படத்தின் இயக்குனர் பணியை ஏற்பதுடன் முதன்முதலில் தான் இயக்கும் படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் 50 வயது பெண்ணாகவும் மிகவும் வித்தியாசமான கேரக்டராக இருக்கும் இந்த வேடத்தில் நடிப்பது தனக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தான் அறிந்திருந்தும், சவாலை ஏற்க தயாராகவுள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நான் சரியாக இருப்பேன்

நான் சரியாக இருப்பேன்

இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்று தோன்றியது. அதனால் நடிக்க முடிவு செய்தேன். நானே இயக்கி நானே நடிப்பது, பெரிய சவால்தான். சவால்களை சமாளிப்பதும் மகிழ்ச்சியான விஷயம்தானே என்கிறார்.

சுப்புலட்சுமி பாட்டி

சுப்புலட்சுமி பாட்டி

கவுதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் தன்னுடன் நடித்திருந்த சுப்புலட்சுமி பாட்டி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக கூறிய லட்சுமி, மேலும் ஒரு 24 வயது ஆண் கேரக்டர் இருப்பதாகவும், அந்த கேரக்டருக்கு இன்னும் நடிகரை தேர்வு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

English summary
Popular Actress turned Director Lakshmi Ramakrishnan said her third directorial venture ‘Ammini’. She made me realize on the values of life which many of us do not under stand or at least try to understand. She taught me the fact that there is a life beyond Economical dependence This is the fulcrum of ‘Ammini’.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil