»   »  'இந்தியன் 2' படத்துக்கு வசனம் யார் தெரியுமா.. சுஜாதா இடத்தை நிரப்பமுடியுமா?

'இந்தியன் 2' படத்துக்கு வசனம் யார் தெரியுமா.. சுஜாதா இடத்தை நிரப்பமுடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியன் 2 - சுஜாதா இடத்தை நிரப்புவது யார்- வீடியோ

சென்னை : கமல் தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் முதல் படம் 'இந்தியன் 2'. அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அவர் நடிக்கும் கடைசி படமும் இதுவாகக் கூட இருக்கலாம்.

இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்திற்கான லொக்கேஷன்களை தேடி வருகிறார். படத்திற்கான ஷூட்டிங் ஆகஸ்டில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 'இந்தியன் '2' படத்திற்கு எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணக்குமார் வசனம் எழுதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lakshmi saravakumar writes dialogue for Indian 2

சில சிறுகதை தொகுப்புகளையும், 'உப்பு நாய்கள்', 'கானகன்', 'கொமோரா' ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார் லக்‌ஷ்மி சரவணகுமார். இவர், எழுதிய 'கானகன்' நாவலுக்கு 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இயக்குனர் வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக இருந்த லக்‌ஷ்மி சரவணகுமார், 'காவியத் தலைவன்', 'அரவான்' படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும், '2.O' திரைப்படத்தில் மேக்கிங் ஆஃப் எந்திரன் 2.O-வை எழுத்து வடிவில் எழுதியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'இந்தியன் 2' படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், கபிலன் வரைமுத்து ஆகியோரும் வசனம் எழுதுகிறார்கள்.

'இந்தியன்' முதல் பாகம் முதல் 'எந்திரன்' வரை ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதியது எழுத்தாளர் சுஜாதா. அவரது வசனங்கள் பலருக்கும் செம ஃபேவரிட். 'இந்தியன்' படத்தில் நினைவுகூரத்தக்க வசனங்கள் பல இடம்பெற்றிருந்தன.

உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தில் மூன்று பேர் வசனம் எழுதினாலும், சுஜாதா இடத்தை நிரப்ப முடியுமா என்பது சமூக வலைதளங்களில் பலர் எழுப்பும் கேள்வி. படம் வெளியாகும்போதுதான் இதற்கு விடை தெரியும்.

English summary
Director Shankar's 'Indian 2' movie shooting is said to begin in August. Writer Lakshmi Saravanakumar to have written the dialogues for 'Indian 2'. Writer Jayamohan and Kabilan Vairamuthu are also writing the dialogues in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X