இது அடல்ட் காமெடி அல்ல 'போர்ன்' படம்: லட்சுமி ராமகிருஷ்ணன் விளாசல் #IAMK

By Siva

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை விளாசித் தள்ளியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது.

கொச்சை

கொச்சை

படத்தில் இரட்டை அர்த்த வசனங்களாக உள்ளது. அதில் சில வசனங்களை கேட்கவே அருவெறுப்பாக உள்ளது. அந்த அளவுக்கு வசனங்களில் கூட ஆபாசம் உள்ளது. இது போர்ன் படம் அல்ல என்று இயக்குனர் கூறியதை நம்ப யாரும் தயாராக இல்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன்

போர்ன் படம் ஒன்று ரிலீஸாகி தியேட்டர்கள் ஃபுல்லாக உள்ளது. வசூல் ரூ. 15 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பான படம் எடுத்ததற்காக படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஹாசினி, நந்தினி மற்றும் நீளும் பட்டியலில் உள்ள குழந்தைகள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்று லட்சுமி ராமகிருஷ்ணன் விளாசியுள்ளார்.

கோபம்

அடல்ட் காமெடி என்ற பெயரில் பெண்களின் அங்கம் பற்றி அசிங்மாக கமெண்ட் அடித்துள்ளனர். பீப் பாடலுக்கு பொங்கும் மக்கள் இதை எல்லாம் கண்டுகொள்ளாதது ஏன்?

அசிங்கம்

யாராவது உண்மையான அடல்ட் காமெடி படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடல்ட் காமெடி என்ற பெயரில் இப்படி அசிங்கமாக படம் எடுத்துள்ளதை ஏன் யாரும் எதிர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X